கை வைத்தாலே சிமெண்ட் கொட்டுதே.. கடப்பாரையை வச்சு இடிச்ச நாம் தமிழர் நிர்வாகி.. சிக்கிய சம்பவம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் பழையனூரில் கழிவு நீர் கால்வாய் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிட்ட நாம் தமிழர் கட்சி இளைஞர், ஆய்வின் போது சிக்கி கொண்டு திருதிருவென விழித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் பழையனூரில் உள்ள கீழ்பாடி என்ற பகுதியில் அம்பேத்கர் தெருவில் 4.5 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியானது அண்மையில் நடந்தது.

இந்நிலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தரமற்ற முறையில் நடந்தது என்று குற்றம்சாட்டி அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது பெரிய அளவில் பரவியது.
இந்த விவகாரத்தில் நேரடியாக களம் இறங்கிய மாவட்ட நிர்வாகம், செயற்பொறியாளர் தலைமையில் குழு அமைத்தது.. அந்த குழு கழிவுநீர் கால்வாய் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
மேலும் தரமற்ற வகையில் கால்வாய் பணி நடந்திப்பதாக சொன்ன, அந்த இளைஞரையும், அதே ஸ்பாட்டிற்கு கூட்டிற்கு வந்து விசாரித்திருக்கிறார்கள்.
அந்த இளைஞரை விசாரிக்கும் போது, அவர் பெயர் விமல் என்பதும், அவர் நாம் தமிழர் கட்சியில் இருப்பது தெரியவந்தது.
அத்துடன் அந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை வைத்தே, கால்வாய் பணிகளின் தரத்தை ஆய்வு செய்தனர். குறிப்பாக எந்த இடத்தில் வீடியோ எடுத்தாரோ, அங்கேயே கடப்பாரை வைத்து அதிகாரிகள் இடித்து காண்பித்து இருக்கிறார்கள்.
அதேநேரம் இந்த இளைஞரிடமே கடப்பாரையை கொடுத்து நல்லா குத்தி பாருப்பா.. அது இடிஞ்சு விழுகுதா.. எந்த அளவிற்கு தரம் இல்லை அப்படீன்றதை, நீயே பரிசோதனை பண்ணு.. அப்படீன்னு அந்த இளைஞர் கையில் கொடுத்திருக்காங்க.. அந்த இளைஞரும் கடப்பாறையால் குத்தி பார்த்துள்ளார்.
அப்போது அதிகாரிகள்,என்னப்பா உனக்கு சந்தேகம் தீர்ந்துவிட்டதா என்று கேட்டார்கள். அத்துடன், அந்த இளைஞர் முன்பாகவே., ட்ரில்லிங் மிஷினை வைத்து ஓட்டை போட்டும் காண்பித்துள்ளார்கள். இதை பார்த்த அந்த இளைஞர், தேவையில்லாமல் நாமே வந்து இப்படி சிக்கிக்கொண்டோமே என்று திருதிருவென முழித்திருக்கிறார்.
செயற்பொறியாளர் ஆய்வின் முடிவில், கழிவுநீர் கால்வாய் மிக தரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications