ராணிப்பேட்டை பிரவீனா.. டக்னு கேஸ் சிலிண்டரை திருப்பி.. கையில் லைட்டருடன் நின்ற நபர்.. திணறிய போலீஸ்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நள்ளிரவில் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒருவரை வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. அத்துடன் கைதானவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் மேலாபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்.. இவருக்கு 35 வயதாகிறது.. ரேபிடோவில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்... இவருக்கு கடந்த 22ம் தேதி நள்ளிரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

செல்போனில் பேசிய பெண், மணலியிலிருந்து செங்குன்றம் வரைக்கும் செல்ல வேண்டும் என்று கூறி, அந்த காரையும் புக் செய்தார்... உடனே டிரைவர் வினோத் குமாரும், அந்த பெண் குறிப்பிட்ட இடத்திற்கு கிளம்பி சென்று, அங்கிருந்த 2 ஆண்களை ஏற்றிக்கொண்டு மாதவரம் சென்றார்...
வினோத்குமார்: அப்போது எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை சாஸ்திரி நகர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, காரிலிருந்த 2 பேரும் திடீரென டிரைவர் வினோத்குமாரை சரமாரியாக தாக்க துவங்கிவிட்டனர்.. அவரிடமிருந்த 2700 ரூபாயையும் பறித்து கொண்டு தப்பினார்கள்.. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் வினோத்குமார், இதுகுறித்து எம்கேபி நகர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது, டிரைவர் வினோத்குமாருக்கு நள்ளிரவு வந்த அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
கார் டிரைவர்: அதனால், கார் டிரைவரை அழைத்துக்கொண்டு, சவாரியை பிக்கப் செய்த இடத்திற்கு சென்று விசாரித்தார்கள்.. ஆனால், கார் புக்கிங் செய்யப்பட்டவர்கள் அந்த வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் குழம்பிப்போன போலீசார், அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை பதிவுகளை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், சம்பந்தப்பட்ட நபர்கள் மணலி பகுதியில் இருப்பதாக தெரிந்தது.
உடனே போலீசாரும் மணலி பகுதிக்கு விரைந்தனர்.. மணலி துர்கை அவென்யூ பகுதியிலிருந்த அந்த வீட்டிற்குள் நுழைந்தால், ராஜி என்ற 24 வயது குற்றவாளியுடன் அவரது மனைவி பிரவீனா (22 வயது) இருந்தார்.. இதனால் ராஜியை போலீசார் கைது செய்ய முயன்றனர். உடனே ராஜி ஆவேசமடைந்து கிச்சனுக்கு ஓடினார்.. வீட்டிலிருந்த காஸ் சிலிண்டரையும் திறந்துவிட்டு, லைட்டரை கையில் எடுத்துக் கொண்டார்.
திகைத்த போலீஸ்: என்னை அரெஸ்ட் செய்தால், உங்கள் எல்லாரையுமே தீவைத்து கொன்று விடுவேன் என்று போலீசாரை மிரட்டினார். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்... எனினும், சிறிது நேரம் போராடி, ராஜியை மடக்கி பிடித்து, அவரிடமிருந்த லைட்டரையும் வாங்கி, வீட்டிலிருந்து தூக்கி எறிந்தார்கள்.. உடனே ராஜி, கிச்சனிலிருந்த கத்தியை எடுத்துக் கொண்டு வந்து, தன்னைத்தானே வெட்டிக்கொள்ள முயன்றார். அப்போதும் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
பிறகு தம்பதி இருவரையுமே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.. அப்போதுதான், நீண்ட காலமாகவே ராஜி இப்படி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர் என்பது தெரியவந்தது.. கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 18 கேஸ்கள் ராஜி மீது ஏற்கனவே இருக்கிறதாம்.. சரித்திர பதிவேடு ரவுடி என்பதும் உறுதியானது.
பிரவீனா கைது: இவர் தன்னுடைய மனைவி பிரவீனாவை வைத்து, கார் புக் செய்வாராம்.. பிறகு, மணலியில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரின் மூலமாக திருட்டு தொழிலில் ஈடுபடுவாராம்.. அந்த மணலி நண்பரும் வழிப்பறி தொழிலில் ஈடுபட்டு வருபவர்தானாம்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, ராஜி மற்றும் பிரவீனா தம்பதியை போலீசார் கைது செய்தனர்.. தலைமறைவாக உள்ள மணலி நண்பரையும் தேடி கொண்டிருக்கிறார்கள்.
தலைமறைவாக உள்ள நபரின் பெயரும் மணலி ராஜி என்கிறார்கள்.. ஏற்கனவே வழிப்பறி புகார்களில் இந்த புகார்கள் உள்ளதால், அந்த நபர் இவர்தானா? என்பதை அறிய போலீசார் முற்பட்டுள்ளனர்.. நீண்ட நாட்களாகவே தேடப்பட்டு வந்த 24 வயது, ராணிப்பேட்டை சரித்திர பதிவேடு குற்றவாளி, நள்ளிரவில் போலீசாருக்கு காட்டிய ஆட்டம்தான் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications