For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய ரேசன் கார்டு... தீபாவளி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: புதிய ரேசன் கார்டு வாங்க இனி இரசு அலுவலகங்களுக்கு சென்று கால்கடுக்க நிற்க வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை வரும் தீபாவளி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், நான்கு பிரிவுகளில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும். ஆனால், பல மாதங்கள் ஆகியும் வழங்குவதில்லை. இதையடுத்து, புதிய ரேஷன் கார்டுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அமல்படுத்த, உணவு துறை முடிவு செய்தது.

Ration Cards applications to go online from this Diwali

அதன்படி இனி இன்டர்நெட்டிலேயே ரேஷன் கார்டு வாங்கிக்கலாம். புதிய ரேஷன் கார்டுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை தீபாவளி முதல் துவக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.ரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்த அடுத்த 60 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்னும் முறை வழக்கத்தில் இருந்தும் நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது.

இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது தமிழக அரசின் உணவுபொருள் வழங்கு துறை. இதற்காகத் தொடங்கப்பட்டுள்ள www.tnpds.com என்ற இணைய தளத்திற்கு சென்று புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில் கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

குடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, குடும்ப உறுப்பினரின் பெயர்களையும், அதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். ரேஷன் கார்டு வகையை தேர்வு செய்த பின்னர், காஸ் சிலிண்டர் விபரம் குறித்து கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் . இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பின் விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு பதிவு செய்யப்பட்டதற்கான தனி அடையாள எண் வழங்கப்படும் அந்த எண்ணின் மூலம் ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம். இந்த திட்டம் தீபாவளி முதல் அமலுக்கு வரவுள்ளது.

English summary
From Diwali this year, the Government has plans of digitizing this process of applying for a ration card.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X