பெங்களூரிலிருந்து வாணியம்பாடிக்கு காரில் சென்ற தொழிலதிபரிடம் ரூ.7.35 கோடி கொள்ளை
வேலூர்: மயக்க மருந்தை முகத்தில் தெளித்து வாணியம்பாடி அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.7.35 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் பதிவாகியுள்ளது.
பெங்களூரில் இருந்து வாணியம்பாடிக்கு காரில் முகமது அமீன் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் நேற்றிரவு பயணித்துள்ளார். கிருஷ்ணகிரி தாண்டி லட்சுமிபுரம் அருகே கார் சென்றபோது, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள், காரை குறுக்கே நிறுத்திவிட்டு அமீனின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்துவிட்டு, முகமது அமீன் கொண்டு சென்ற ரூ.7.35 கோடி பணத்தை அபேஸ் செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், காரில் இருந்தும் அவரை கீழே தள்ளிவிட்டதாகவும் தெரிகிறது. மயக்கம் தெளிந்த பிறகு எழுந்த அமீன் ரூ.7.35 கோடி காணாதது குறித்து அதிர்ச்சியடைந்தார். அமீன் அளித்த புகாரின் பேரின் திருப்பத்தூர் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெகிறது.
கொள்ளை போன பணம், பெங்களூரில் நிலத்தை விற்று சம்பாதித்தது என்று அமீன் தெரிவித்துள்ளார். எனவே பெங்களூரிலிருந்தே மர்ம நபர்கள் காரில் பின்தொடர்ந்து வந்து கொள்ளையடித்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. காரில் இருந்து தள்ளிவிட்டதில் காயமுற்ற அமீன், மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் அமீன் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதால் வழக்கில் இன்னும் துப்பு கிடைக்கவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications