உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க திமுக வலியுறுத்துவது இதனால்தான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உள்ளாட்சி பதவிகளில் முறையான சுழற்சி முறை இல்லை; வாக்குச் சீட்டு பயன்படுத்துவதால் முறைகேடுகளுக்கு வாய்ப்பு என்பது உள்ளிட்ட காரணங்களால் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. ஆனால் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என அறிவித்த உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை அக்டோபர் 6-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என திமுக ஏன் வலியுறுத்துகிறது என அதன் ராஜ்யசபா எம்.பி.யும் அமைப்பு செயலருமான ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி முன்வைக்கும் காரணங்கள்:
- உள்ளாட்சிப் பதவிகள் இட ஒதுக்கீடு விஷயத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான சுழற்சி முறை கடைபிடிக்க வேண்டும்.
- மறைமலை நகர் 20 ஆண்டாக தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியாக இருக்கிறது. அதை இந்த முறையும் மாற்றவில்லை.
- சென்னையில் 1996-ல் இருந்து மேயர் பதவி ஆண்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.
- திருச்சியில் 20 ஆண்டுகளாக மேயர் பதவி பெண்களுக்குத்தான் இருக்கிறது. இப்போதும் பெண்களுக்குத்தான் ஒதுக்கியிருக்கிறார்கள்.
- தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குப் பதவி தருவதற்காக ஆளும் கட்சி சொல்வதை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி இருக்கிறது என்பது குற்றச்சாட்டு.
- மாநகராட்சி, நகராட்சி ஆகிய இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் மட்டும்தான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துகின்றனர்.
- பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நடைபெறும் தேர்தல்களில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்துகின்றனர். வாக்குச் சீட்டுகளில் வேட்பாளர்களின் பெயர் இருக்காது.
- வாக்குச் சீட்டுகளை மொத்தமாக எடுத்து தங்களுக்குச் சாதகமான வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாற்றிக் கொள்கின்றனர்.
- இதைத் தடுக்கவே பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணு இயந்திரம் பயன்படுத்த வேண்டும்.
- உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற பொதுத்தேர்தல் போல வாக்குச் சாவடிகளில் மத்திய அரசு ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும். பிற மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும்.
- மாவட்ட கவுன்சில் தேர்லில் பதிவாகும் வாக்குகளை 2 இடத்தில் எண்ணும்போது முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது.
- பஞ்சாயத்து, மாவட்ட கவுன்சில், நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட 5 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications