சாலை விபத்து அதிகரிக்க காரணம் மது போதை, தூக்க கலக்கம்... ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தூக்கமின்றி வாகனங்களை ஓட்டுவதாலும், குடிபோதையில் வாகனங்களை இயக்குவதாலும் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.

தமிழகத்தில் தினம் தினம் சாலை விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிக்கொண்டுள்ளனர். அதற்கான காரணம் என்ன என்பதை ஒன் இந்தியா சிறப்புப் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது.

Reasons for more road accident in Tamilnadu

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகலில் தினமும் ஏதவாது ஒரு பகுதியில் தினமும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகல் ஏற்பட்டுக்கொண்டுதான் உள்ளன. நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகிறது.

பேருந்துகள், கனரக லாரிகள், கார்கள் என விதவிதமான வாகனங்களில் எரியும் விளக்குகள் எதிரில் வருபவர்களின் கண்களைக் கூசச் செய்கிறது. இதனால் அதிகமான விபத்துகள் ஏற்படுகிறது.

நள்ளிரவு நேரத்தில் தூக்கக் கலக்கத்தில் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்கிறது காவல்துறை. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் தினமும் பத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைகின்றனர்.

போக்குவரத்துவிதிகளை பின்பற்ற வேண்டும் என போலீசாரும் போக்குவரத்து போலீசார் வலியுறுத்தினாலும், அதை மீறும் காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சாலைகளில் வாகனத்தில் சாகசங்கள் செய்வதாலும் விபத்துகள் நடக்கின்றன என்கின்றனர் ஒரு சாரார்.

தூக்கமின்றி வண்டி ஓட்டுவதாலும், குடிபோதையில் வாகனங்களை இயக்குவதாலும் ஒருவரையொருவர் முந்தி செல்ல வேண்டும் என்று விழைவதாலும் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Oneindia find out reasons for road accident in Tamilnadu highways.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற