ஜெயலலிதா இல்லாத முதல் கோயில் யானைகள் முகாம் நிறைவு! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

உதகை: உதகை தெக்கம்பட்டியில் 30 நாட்களாக நடந்து வந்த யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவடைந்தது. முகாமில் பங்கேற்ற 22 யானைகளும் புத்துணர்வுடன் இன்று முகாமை விட்டு வெளியேறி, தங்களது இடங்களுக்குச் செல்லும்.

வருடம்தோறும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை நடத்தி வருகிறது.

Rejuvenation camp for temple elephants ends

இந்த வருடம் யானைகள் புத்துணர்வு முகாம், கடந்த மாதம் 19ஆம் தேதி, உதகை தெப்பக்காட்டில் தொடங்கியது. இந்த 30 நாட்களும் யானைகளுக்கு நல்ல உணவு, ஆயுர்வேதக் குளியல், மருத்துவ சிகிச்சை அனைத்தும் வழங்கப்பட்டது.

புத்துணர்வு முகாம் நிறைவடைவதையொட்டி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, யானைகளுக்கு பழங்கள் கொடுக்கப்பட்டன. ஜெயலலிதா இல்லாமல் நடைபெற்ற முதல் யானை புத்துணர்வு முகாம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rejuvenation camp for temple elephants ends today. Last 30 days this camp held in Thekkampatti, Ootty.
Please Wait while comments are loading...