For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிஎன்என் நியூஸ் 18 இந்தியன் ஆஃப் த இயர் விருது... சென்னை மக்களுக்காக பெற்றார் ஆர்.ஜே. பாலாஜி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்த சென்னை மக்களுக்கு சிஎன்என் நியூஸ் 18 சார்பில் ‘இந்தியன் ஆப் தி இயர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த சென்னை மக்களின் சார்பில் ஆர்.ஜே.பாலாஜி, சின்மயி ஆகியோர் இந்த விருதை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கையில் இருந்து பெற்றுகொண்டனர்.

RJ Balaji received CNN-News18's Indian of The Year Award 2015

கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூரில் கனமழை கொட்டியது. உலகம் முழுவதிலும் இருந்து வந்து சென்னைவாசிகளுக்கு உதவிகள் குவிந்தன. சென்னையில் பல இளைஞர்கள், பிரபலங்களுடன் இணைந்து உயிரை பணயம் வைத்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டதோடு உதவிகளை செய்தனர். அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

சிஎன்என் நியூஸ் 18 சார்பில் ‘இந்தியன் ஆப் தி இயர்' விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்த சென்னை மக்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த சென்னை மக்களின் சார்பில் ஆர்.ஜே.பாலாஜி, சின்மயி ஆகியோர் இந்த விருதை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கையில் இருந்து பெற்றுகொண்டனர்.

விழாவில் பேசிய பாலாஜி, இனி சென்னை மசாலா தோசை, ரஜினி, லுங்கி டான்ஸுக்கு மட்டுமில்லை தேசத்தின் உற்சாகத்திற்கு எடுத்துக்காட்டு என கூறினார். வெள்ளத்தின் போது இரவு பகலும் தூக்கமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்யப்பட்ட உதவிகளை பகிர்ந்து கொண்டார் பாலாஜி.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் கடலூர் மாவட்ட மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போது நடிகர் சித்தார்த் உடன் இணைந்து சமூக வலைத்தளங்களின் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து செயல்பட்ட விதத்தை விருது பெரும் நிகழ்ச்சியில் பரிந்து கொண்டார் பாலாஜி.

English summary
This is the big one The #IndianOfTheYear 2015 award goes to the People of Chennai. RJ Balaji receive inidan of the year 2015 award.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X