For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சலசலப்பின்றி முடிந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்- மாலை 5 மணிவரை 74.5% வாக்குகள் பதிவு- live

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இன்னும் சிறிது நேரத்தில் வாக்குப் பதிவு தொடங்க உள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அமைதியாக நிறைவடைந்துள்ளது. மாலை 5 மணிவரை 74.5% வாக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்தும் 80-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மக்கள் காத்திருப்பதால் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.

-ஆர்.கே.நகரில் மாலை 5 மணி 74.5% வாக்குகள் பதிவு

-ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவு

-ஆர்.கே.நகர் தொகுதி வாக்குப் பதிவு நேரம் முடிந்த பின்னரும் நீடிக்கும் கூட்டம்

-வாக்காளர்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்

-ஆர்.கே.நகரில் மாலை 4 மணிவரை 65% வாக்குகள் பதிவாகி இருந்தன

-இன்னும் சிறிது நேரத்தில் ஆர்.கே.நகரில் வாக்குப் பதிவு நிறைவு

-வாக்குப் பதிவு நிறவடையும் நிலையிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருப்பு

-ஆர்.கே.நகர்: 4 மணி நிலவரப்படி 65% வாக்குப் பதிவு

-184 வாக்குச் சாவடிகளில் மாலை 3 மணி வரை 57.16% வாக்குகள் பதிவு

-ஆர்.கே.நகரில் சுமூகமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது- பிரவீன் நாயர்

-ஆர்.கே.நகர் தேர்தலில் பகல் 1 மணிவரை 41.60% வாக்குகள் பதிவு

-ஆர்.கே.நகரில் 10 மணிவரை 10.99% வாக்குகள் பதிவு

-ஆர் கே நகரில் வாக்குப் பதிவு சரியாக போகிறது- தினகரன்

-வாக்களித்த பின் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் செய்தியாளர்களுடன் சந்திப்பு

-ஆர்.கே.நகரில் 77-வது வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது

-அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வாக்களித்தார்

-காலை 9 மணி நிலவரப்படி 7.32% வாக்குகள் பதிவு

-முதல் 1 மணிநேரத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் விறுவிறு வாக்குப் பதிவு

-வாக்குக்கு ரூ6,000; ரூ60,000 கொடுத்தாலும் திமுகவே வெல்லும்: வேட்பாளர் மருதுகணேஷ்

-ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்

-தினகரன் மீது பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் புகார்

-20 ரூபாய் நோட்டை கொடுத்து சீரியல் எண்ணை போனில் தெரிவித்தால் 1 ஓட்டுக்கு ரூ6,000 லஞ்சம் என புகார்

-3000-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்: கமிஷனர் விஸ்வநாதன்

-பழைய வண்ணாரப்பேட்டையில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆய்வு

-ஆர்கே நகர் தேர்தல் முறையாக நடைபெறும் என நம்புகிறோம்: மருதுகணேஷ்

-வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு மருதுகணேஷ் பேட்டி

-பழைய வண்ணாரப்பேட்டையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வாக்களித்தார்

-காலை 7.15 மணி முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று காத்திருந்தனர்

-ஆர்.கே.நகரில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க திரண்டனர்

- காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது

- அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

- 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

- அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம், பாஜகவின் கரு. நாகராஜன் மற்றும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முக்கிய வேட்பாளர்கள்.

RK Nagar to go for by-polls today

- மொத்தம் 2,28,234 வாக்காளர்கள் உள்ளனர்.

- ஆண் வாக்காளர்கள்; 1,10,903; பெண்கள்- 1,17,232; 3-ம் பாலினத்தவர் 99.

- 50 மையங்களில் 258 வாக்குச் சாவடிகள் அமைப்ப்பு

RK Nagar to go for by-polls today

- 258 வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியில் 1638 அலுவலர்கள்

- ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 15 துணை ராணுவப் படை வீரர்கள்

RK Nagar to go for by-polls today
English summary
Bypoll elections for prestigious RK Nagar constituency will be conducted today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X