400 பேர் வங்கி கணக்கில் ரூ.11 கோடி டெபாசிட் செய்ததா செம்மரக் கடத்தல் கும்பல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை செம்மரக்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் கணக்குகளில் 11 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்திருப்பதாக ஆந்திர மாநில டீஐஜி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் 400 பேர் கணக்கில் 11 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக் கூறியுள்ளார்.

செம்மரக்கடத்தல் கும்பல், ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டி அதிக விலைக்கு வெளிநாடுகளுக்கு கடத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர். இதற்காக திருவண்மலை, வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வறுமையில் வாடும் மக்களிடம் பண ஆசைக் காட்டி அவர்களை மரம் வெட்ட அந்த கும்பல் அழைத்து செல்கிறது.

Rs 11 crore had been deposited in the Red wood gang's account?

உயிரை பணயம் வைத்து மரம் வெட்ட செல்லும் அவர்கள் போலீசில் மாட்டிக்கொண்டால், செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் எதுவும் தெரியாதது போல் தப்பி விடுகின்றனர். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான அப்பாவி கூலித்தொழிலாளர்கள் ஆந்திர சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை இந்தியன் வங்கி கிளையில் தங்களின் வங்கிக் கணக்கில் 11 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்துள்ளதாக அம்மாநில டிஐஜி காந்தராவ் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் 400 பேர் கணக்கில் 11 கோடி டெபாசிட் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Andra police says Rs.11 crore had been deposited in the account of red wood gang's account. The money had been deposited in the branch of jawathu malai in Thiruvannamalai district.
Please Wait while comments are loading...