நீங்கள் மட்டும் ஆணாக இருந்திருந்தால்... விஜிலாவுக்கு எதிராக கொந்தளித்த குரியன்!
டெல்லி: ராஜ்யசபாவில் இன்று படு ஆவேசமாக பேசிய அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த்துக்கு எதிராக துணைத் தலைவர் குரியன் கொந்தளித்து விட்டார். நீங்கள் மட்டும் ஆணாக இருந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுத்திருப்பேன் என்று அவர் கோபத்துடன் கூறினார்.
ராஜ்யசபாவில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சசிகலா தரப்பு மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பிக்கள் கடும் வாக்குவா4தத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பும் கடுமையாக மோதிக் கொண்டதால் துணைத் தலைவர் குரியனும் கோபமாகி விட்டார்.

ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் பேசிக் கொண்டிருந்தபோது சசி தரப்பைச் சேர்ந்த விஜிலா குறுக்கிட்டு பேசிக் கொண்டே இருந்தார். விடாமல் அவர் பேசியதைப் பார்த்த குரியன் கோபமாகி விட்டார். உட்காருமாறு அவர் பலமுறை கூறியும் விடவில்லை விஜிலை. தொடர்ந்து ஆவேசமாக பேசியதால் மேலும் கோபமடைந்தார் குரியன்.
ஆவேசமடைந்த குரியன் எழுந்து நின்று, நீங்கள் என் சகோதரி போன்றவர். இப்படிசெய்யலாமா. உட்காருங்கள். இதுவே ஆணாக இருந்திருந்தால் நான் கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பேன். ஒருவர் பேசும்போது குறுக்கிடாமல் இருந்தால்தான் அவர் பேசுவதை நான் கவனிக்க முடியும். அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமா என்பதை முடிவெடுக்க முடியும். இத்தனை கூறியும் அமர மறுத்து தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இது அநாகரீகமானது என்று அவர் கோபாவேசமாக கூறினார்.
விஜிலாவின் பேச்சு மற்றும் குரியனின் கோபம் இன்று ராஜ்யசபாவை ஸ்தம்பிக்க வைத்து விட்டது.
-
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications