அசிங்கப்பட மாட்டாய்.. எஸ்.வி.சேகர் யாரைச் சொல்கிறாரு??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நேர்மையாளராக இருப்பவர் எந்த நேர்காணலிலும் அசிங்கப்படமாட்டார் என்று நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் கூறிய கருத்துக்கு இவர் யாரைச் சொல்கிறார் என்று பலரும் பல வியூகங்களை அவிழ்த்து விட்டுள்ளனர்.

மெர்சல் திரைப்பட விவகாரத்தையடுத்து பாஜகவினர் பலமுனை தாக்குதல்களுக்கு ஆளாவது வழக்கமாகி வருகிறது. இதற்கு முக்கிய வழிவகுப்பது டுவிட்டரில் அவர்கள் பதிவிடும் கருத்துகள்.

மெர்சல் சர்ச்சை முதலே வெளிப்படையாக எந்த விமர்சனத்தையும் கூறாமல் பூடகமாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துளை பதிவிட்டு வருகிறார் எஸ்.வி.சேகர். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் நீ ஒரு திருடனாகவும், அயோக்கியனாகவும், ஊழல்வாதியாகவும் இல்லாத நேர்மையானவனாக இருந்தால் எந்த நேர் காணலிலும் அசிங்கப்படமாட்டாய். "ஏதோ தோணிச்சு" என்று குறிப்பிட்டு போட்டிருந்தார்.

எஸ்ஏசின்னு சொன்னா கும்மிடுவாங்க

எஸ்.வி. சேகர் இந்தப் பதிவில் யாரைச் சொல்கிறார் என்று பலரும் அவரது பக்கதில் வந்து பதில் போட்டுள்ளனர். அதில் சில சுவாரஸ்யமான பதில் டுவீட்டுகளின் தொகுப்பு. மெர்சல் படத்தில் விஜய்க்கு எழுந்த சர்ச்சை குறித்து அவரது தந்தை எஸ்.எ.சந்திரசேகர் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தார். அவரைக் குறிக்கும் வகையில் தான் இந்தப் பதிவு என்று ஒருவர் கருத்து பதிந்துள்ளார். எஸ்ஏ.சந்திரசேகர்னு தெரியும் கும்மிறுவாங்க அதான் மாத்தி சொன்னேன் என்று நக்கலாக டுவீட்டியுள்ளார் இவர்.

பாதுகாப்பு போடனுமேனு பயம்

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்பதை நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைக்கிறார் என்றும் அதற்கான காரணத்தையும் இந்த நெட்டிசன் பகிர்ந்துள்ளார். Sacனு சொன்னா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடனுமேனு பயம்! அதான் சுத்தி வளச்சு என்று பதிவிட்டுள்ளார்.

எச். ராஜா கோச்சுக்க மாட்டாரா?

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வருகிறார். அவரைக் குறிப்பிட்டுத் தான் இந்தப் பதிவு என்று கிளி கிளப்புகின்றனர் சிலர். சார் நீங்க ஹெச்.ராஜா பத்தி இப்படி ஓபனாவே பேசுறீங்களே அவரு கோவிச்சுக்க மாட்டாரா....??? என்று கேட்டுள்ளார் இவர்.

இப்படியா போட்டுக்கொடுப்பாங்க?

எஸ்.வி.சேகர் சொந்தக் கட்சிக்காரர்களைத் தான் இப்படி சொல்கிறார் என்று சிண்டுமுடிகின்றனர் சிலர். இப்படி பொட்டுனு போட்டு ஒடச்சா எப்படி? சொந்தக்கட்சிக்குள்ளேயேவா போட்டுக்கொடுப்பாங்க? என்று மனதில் பட்டதை சொல்லி இருக்கிறார் இந்த வெள்ளந்தி.

நேர்காணலுக்கு வரச்சொல்லுங்க

மற்றவர்களை விமர்சிக்கும் எஸ்.வி.சேகர் பிரதமர் மோடியை ஊடக நேர்காணலுக்கு வரச்சொல்லுங்கள் என்று வம்பிழுத்துள்ளார் இந்த வலைபதிவர். அப்போ மோடியை நேர்காணலுக்கு வரசொல்லுங்கா - ஏதோ தோணிச்சு என்று கருத்து பதிந்துள்ளார்.

எது தடுக்கிறது

அசிங்கப்பட்டு விடுவோம் எனும் பயம்தான் நம் பிரதமரை மூன்று ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளர் நேர்காணலை எதிர்கொள்ள முடியாமல் தடுக்கிறது! பிரதமர் நரேந்திர மோடியை பத்திரிக்கையாளர் நேர்காணலுக்கு வரச் சொல்லுங்கள் என்று எஸ்.வி.சேகரை சிலர் ஒரண்டை இழுக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor cum BJP cadre S.Ve.Shekher tweet trolled by Netizens as he is not mentioned anyone openly in his acccusing tweet about a debate show guest.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற