For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் இனி ரூ1.05 லட்சம் - இரு மடங்காக உயர்த்தி எடப்பாடி அதிரடி அறிவிப்பு!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை இரு மடங்காக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியம் இனி ரூ1.05 லட்சம். தமிழக எம்எல்ஏ-க்கள் தங்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிவந்தனர். இந்நிலையில் தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

Salary hike for TN MLAs

இதைத் தொடர்ந்து தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ. 2.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படுகிறது. எம்எல்ஏ-க்களின் ஓய்வூதியமும் ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது என்றும் அவர் அறிவித்தார்.

தற்போது எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.55 ஆயிரமாகவும், தொகுதி மேம்பாட்டு நிதியானது ரூ. 2 கோடியாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்எல்ஏ-க்களுக்கான ஊதியம் இரு மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
CM Edappadi Palanisamy says that salary of TN MLAs revised from Rs. 55,000 to Rs. 1.05 lakhs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X