சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் எத்தனை விவசாயிகளுக்கு பாதிப்பு? முத்தரசன் பரபர தகவல்
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் 72,273 விவசாயிகளுக்கு பாதிப்பு என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கோவை : சேலம் - சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தால் 72,273 விவசாயிகள் பாதிகப்படுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சேலம் - சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து வருகிறது.

இந்த திட்டத்தால் 72,273 விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள், ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன. பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து விவசாயிகளிடம் அரசு எந்த ஒரு கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் நடத்தவில்லை.
மாறாக இந்த திட்டம் குறித்து எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கைது செய்கிறது. அவர்கள் மீது கொலை, சதி வழக்குகள் பதியப்படுகின்றன.
பியூஷ் மனுஷ், வளர்மதி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு கொண்டுவரும் திட்டங்களின் மீது கருத்து கூறும் குடிமக்களை, சமூகவிரோதிகள் என விமர்சிக்கிறார்கள். மாற்றுக்கருத்து கூறும் குடிமக்கள் சமூகவிரோதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தில், மிக மோசமான நிலையில் நிர்வாகம் சீர்கெட்டு கிடக்கிறது. ஊடகங்கள் அச்சுறுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications