சசிகலா குடும்பத்தை ஒதுக்கியது தர்மயுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி- ஓபிஎஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தொண்டர்களின் இயக்கம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைத்தது நாங்கள் நடத்தி வந்த தர்மயுத்தத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் அமைச்சர்கள் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் டிடிவி தினகரன், சசிகலாவை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர்கள் அறிவித்தனர். ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் பேச குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதலில் எதிர்ப்பு தெரிவித்த டிடிவி தினகரன், கட்சியின் நன்மைக்காக தான் அதிமுகவில் இருந்து ஒதுங்கிவிட்டதாக கூறினார்.

தொண்டர்களின் இயக்கம்

தொண்டர்களின் இயக்கம்

கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் இன்று காலை முதலே பரபரப்பாக ஆலோசனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கம் மாபெரும் தொண்டர்களின் இயக்கம் என்று கூறினார்.

தர்மயுத்தத்திற்கு வெற்றி

தர்மயுத்தத்திற்கு வெற்றி

மாபெரும் இந்த இயக்கமும், ஆட்சியும் சசிகலாவின் குடும்பத்தின் கையில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே தர்மயுத்தம் நடைபெற்றது. எங்களின் தர்மயுத்ததிற்கு முதல் வெற்றியாக சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக கூறியுள்ளனர். இது மக்களின் இயக்கம்தான் என்பதை நிரூபிப்போம்.

தொண்டர்கள் விருப்பம்

தொண்டர்கள் விருப்பம்

எங்களின் தர்மயுத்தம் மீண்டும் தொடரும், மக்கள், தொண்டர்களின் விருப்பத்தின் படி இணைந்து செயல்படுவது பற்றி அமர்ந்து பேசி முடிவெடுப்போம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

நீதி விசாரணை

நீதி விசாரணை

சசிகலா குடும்பத்தை வெளியேற்றுவதற்காக மட்டுமா ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்? ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை என்பதும் அவரது முக்கியமான கோரிக்கைதானே? அதைப்பற்றி நேற்று பேசிய ஓபிஎஸ் இன்று எதுவுமே கேட்கவில்லையே என்ற சந்தேகம் செய்தியாளர்கள் அனைவருக்குமே எழுந்துள்ளது. ஒருவேளை தர்மயுத்தம் தொடரும் என்று கூறியுள்ளதால் கட்சி இணைந்த பின்னரும் நீதி விசாரணை கேட்பாரா பார்க்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasi family out of ADMK our Dharma Yutham success said former Chief Minister O.Panneerselvam.
Please Wait while comments are loading...