பதவிகளிலிருந்து தூக்கி வீசப்படுகிறார்கள் சசிகலா - தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயாளர் பதவியிலிருந்து சசிகலாவையும், துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தினகரனையும் நீக்க அடுத்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியை விட்டு தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைக்கப் போவதாக எடப்பாடி அதிமுக குரூப் அறிவித்துள்ளது. இதனால் அதிமுக மேலும் ஒரு பிளவை சந்திக்கவுள்ளது. தினகரன் தரப்பு வெளிப்படையாகவே இதை எதிர்த்து விட்டது.

Sasikala and Dinakaran to be sacked soon

இந்த நிலையில் அடுத்தகட்டமாக தினகரனை கட்சியை விட்டும் கட்சிப் பதவியை விட்டும் நீக்கும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. அதாவது துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தினகரன் நீக்கப்படலாம். அத்தோடு சசிகலாவையும் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இவர்கள் நீக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பி.எஸ். தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இதுதொடர்பான நடவடிக்கைகள் பாயக்கூடும் என்று தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Both Sasikala and Dinakaran will be sacked from their party posts by the Edappadi group soon.
Please Wait while comments are loading...