நடராஜனை காப்பாற்ற எடுத்த முயற்சிகளில் துளி கூட ஜெ.வுக்கு எடுக்கவில்லை.. ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சசிகலாவின் கணவர் நடராஜனை காப்பாற்ற எடுத்த முயற்சிகளில் துளிக்கூட ஜெயலலிதாவை காப்பாற்ற எடுக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனை காப்பாற்ற எடுத்த முயற்சிகளில் துளிக்கூட ஜெயலலிதாவை காப்பாற்ற எடுக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சசிகலாவின் கணவரான நடராஜன் கிட்னி, கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அண்மையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திக் என்ற மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்புகள் நடராஜனுக்கு பொறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

கணவரை சந்தித்த சசிகலா
இதைத்தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவரும் தனது கணவரை காண சசிகலா 5 நாள் பரோலில் சென்னை வந்துள்ளார். அவர் இதுவரை இரண்டுமுறை தனது கணவரை சந்தித்து நலம் விசாரித்து வந்துள்ளார்.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதை போல நடராஜனை காப்பாற்ற சசிகலா குடும்பம் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பட்டியலிட்டார்.

துளிக்கூட முயசிக்கவில்லை
நடராஜனை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகளில் துளிக்கூட ஜெயலலிதாவை காப்பாற்ற மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தமிழக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.

சாத்தான் வேதம் ஓதுவதுபோல்
ஆனால் தினகரனோ அல்லது சசிகலா குடும்பத்தினரோ ஜெயலலிதாவுக்காக என்ன பிரார்த்தனை மேற்கொண்டனர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தினகரன் பேசுவதோ சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்றும் அவர் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications