அங்குலம் அங்குலமாக போட்டுக் கொடுத்த புண்ணியவான் அவரா? இவரா? மண்டை காயும் மன்னார்குடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலா குடும்பத்தில் ரூ 1,430 கோடி கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் சிக்கின!- வீடியோ

  சென்னை: வருமான வரி சோதனை முடிந்து விசாரணைக்குப் போய்க் கொண்டிருக்கிறது சசிகலா குடும்பம்... இப்போது தங்களைப் பற்றி இப்படி அங்குலம் அங்குலமாக வருமான வரித்துறையிடம் போட்டுக் கொடுத்தது யார்? என்கிற விவாதம்தான் சசிகலா உறவுகளிடத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

  சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 355 பேரை இலக்கு வைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இத்தனை பேரை இலக்கு வைத்த வருமான வரித்துறை மேற்கு திசையைச் சேர்ந்த தென்திசை பேரரசன் பெயரைக் கொண்டவரை மட்டும் விட்டுவிட்டது.

  இது பலருக்கும் படுபயங்கர ஆச்சரியம்.. இத்தனைக்கும் அந்த பேரரசன் பெயரை கொண்டவரால் வள்ளலாக உருவெடுத்த முருகனெல்லாம் கூட ரெய்டில் சிக்கினார். ஆனால் அந்த மனுசர் மட்டும் சிக்கவே இல்லை. அவர் சம்பந்தப்பட்ட இடமும் கூட குறிவைக்கப்படவில்லை.

  சந்தேகப் பார்வை

  சந்தேகப் பார்வை

  இதனால் பேரரசன் மீதுதான் முதல் சந்தேகப் பார்வை பட்டது. இவ்வளவு விலாவரியாக குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி வேறு யாருக்கும் தெரியாது என்பதால் ரொம்பவும் திடமாகவே அவர் மீதே முதலில் சந்தேகம் கொண்டிருந்தனர்.

  சசி குடும்ப நிறுவனங்கள் வளைப்பு

  சசி குடும்ப நிறுவனங்கள் வளைப்பு

  அதன்பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் நடந்து கொண்ட விதம், சோதனைக்கு சென்ற நிறுவனங்களில் பலரது பெயரை குறிப்பிட்டு அந்த சாவி, அந்த ஆவணம் எங்கே என கேட்டபோது சசிகலா குடும்பங்களுக்கு தூக்கி வாரிப் போட்டதாம். இவரை எப்படி அதிகாரிகளுக்குத் தெரிந்தது? என்பதுதான் குழப்பமாம்.

  கோட்டையில் ஆலோசனை

  கோட்டையில் ஆலோசனை

  பெரும்பாலான நிறுவனங்களில் இதேபோன்ற நிகழ்வு நடந்திருக்கிறது. ஆகையால் ரெய்டுக்கு முன்னர் மிகப் பெரிய அளவில் ஹோம் ஒர்க் செய்து கொண்டுதான் களமிறங்கிருக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டனராம். இப்படி ஹோம் ஒர்க் செய்ய உதவியது யார் என தோண்டுகிற போது காட்டிக் கொடுத்தவர்கள் என சந்தேகப்படுகிற நபர்கள் பலரும் கோட்டை பாஸால் நேரடியாக வரவழைக்கப்பட்டவர்கள் என்கிற விவரமும் கிடைத்ததாம். அதனால் கோட்டை பாஸ்தான் சார்ட் போட்டு அனுப்பியிருப்பாரோ என மண்டை காய்ந்து கொண்டிருக்கிறது ஒருபுறம்.

  விவேக் விசுவாசி

  விவேக் விசுவாசி

  இந்நிலையில் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்குகிறோம் என முதன் முதலில் அறிவித்த டெல்டா மாவட்டத்துக்காரரை நோக்கி கை நீட்டப்படுகிறது. அவரைத்தான் தினகரன் முதன் முதலில் கட்சியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்திருந்தார். ஒரே மாவட்டத்தில் இருந்தும் சசிகலா குடும்பத்தால் சட்டசபை தேர்தலில் மண்ணை கவ்வ வைக்கப்பட்டு அவமானத்துக்குள்ளானவர்; ஜெயலலிதாவால் சில மாதங்களிலேயே ஏறுமுகம் பெற்றவர். அதிமுகவில் கலகம் வரும் வரை விவேக்கின் வலதுகரமாக முழுமையாக இருந்தவர்.

  காட்டிக் கொடுத்தது அவர்தானா?

  காட்டிக் கொடுத்தது அவர்தானா?

  அத்துடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணையும்போது கூட விவேக்கை எதுவும் செய்ய வேண்டாம் என்கிற ரேஞ்சில் விசுவாசமாக இருந்தார்; இதனால் விவேக்கும் ரொம்பவே நெகிழ்ந்திருந்தார். ஆனால் காலமும் மாற காட்சிகளும் மாற இப்போது சசிகலாவின் அத்தனை உறவுகளும் போட்டுக் கொடுத்த புண்ணியவான் அவராகத்தான் இருக்கும்...அவர் மட்டுமேதான் இருக்க முடியும் என ஸ்ட்ராங்காக கருவிக் கொண்டிருக்கின்றனராம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  AIADMK sources said that Sasikala Family is suspectiong some senior leaders are behind the Income Tax raid against them.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X