முன்னும், பின்னும் 4 கார்கள் அணிவகுக்க, சோகத்தோடு தஞ்சைக்கு பயணிக்கும் சசிகலா - வீடியோ
Recommended Video

சேலம்: நான்கு கார்கள் முன்னும் பின்னும் அணி வகுக்க, சசிகலா சேலம் வழியாக தஞ்சை நோக்கி செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன.
கணவர் நடராஜன் மரணமடைந்ததையடுத்து, இறுதி சடங்குகளில் பங்கேற்பதற்காக, பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து 15 நாட்கள் பரோலில் வெளியயே வந்துள்ளார், சசிகலா.
மீடியாக்களை சந்திக்க கூடாது, பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்பது போன்ற பல நிபந்தனைகள் சசிகலாவுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

மாலையில் சேலம்
இன்று பிற்பகல் பெங்களூரில் இருந்து காரில் தஞ்சாவூருக்கு புறப்பட்டார் சசிகலா. மாலை 4 மணியளவில் அவரது கார் சேலம் அருகே டோல்கேட்டை தாண்டியது. அப்போது அங்கிருந்த நமது வீடியோமேன்கள் கேமராவில் அந்த காட்சிகள் சிறைபிடிக்கப்பட்டன.

அதிமுக கொடி
அதிமுக கொடி பொருத்தப்பட்ட கார் ஒன்று முதலில் சென்றது. 2வது காராக சசிகலா காரும், அதைத்தொடர்ந்து, 2 எஸ்யூவி வகை கார்களும், கடைசியாக ஒரு ப்ரீமியர் ஹாட்ஜ்பேக் வகை காரும், சென்றன.

முன்னும், பின்பும்
முன்னால் ஒரு வாகனம், பின்னால் 3 வாகனங்கள் புடை சூழ சசிகலா பயணித்தார். டோல்கேட் பகுதியில் அவரை பார்த்து கையெடுத்து கும்பிட்டவர்களுக்கு பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார். ஆனால், சசிகலா முகத்தில் தீராத சோகம் குடி கொண்டிருந்தது.

சசிகலா சோகம்
சிறையில் இருந்து வெளியே வந்தபோதும், ஆதரவாளர்கள் கும்பிடும்போதும், அவர் தனது வழக்கமான புன்னகையை தவிர்த்திருந்தார். கணவரை இழந்த சோகம் சசிகலாவை வாட்டியதை பத்திரிகையாளர்களால் யூகிக்க முடிந்தது. இரவில் அவர் தஞ்சாவூர் சென்று சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications