For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலாவுக்கு ஆதரவு- முதல்வர் பதவியில் இருந்து ஓபிஎஸ்சை வீழ்த்த களமிறங்கிய தங்க தமிழ்ச்செல்வன்!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக தேனி மாவட்ட செயலாளரும், ஆண்டிபட்டி எம்.எல்.ஏவுமான தங்க தமிழ் செல்வன் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை உடைக்க வெளியில் இருந்து யாரும் வரவேண்டாம், அதை நாங்களே பார்த்துக்கொள்வோம் என்பதை சொல்லாமல் சொல்லி வருகின்றனர் அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள்.

1987 டிசம்பர் 24ம் தேதி எம்.ஜி.ஆர் மரணத்திற்குப் பின்னர் அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. இது கட்சியை இரண்டாக உடைத்தது. இரட்டை இலை சின்னமே முடக்கப்படும் நிலைக்கு போனது. திமுக மீண்டும் அரியணை ஏற அதுவே காரணமானது.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விடுமோ என்ற நிலை தற்போது உருவாகி வருகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் என்ன நடக்கிறது என்று 75 நாட்கள் தெரியாமல் மருத்துவமனையில் உறங்கிக் கொண்டிருந்த ஜெயலலிதா, எதுவும் அறியாமலேயே மரணமடைந்து விட்டார். இப்படி ஒரு மரணம் திடீரென நிகழும் என்று தெரிந்து தானோ என்னவோ கடந்த ஒரு ஆண்டு காலமாகவே, எனக்கு பின்னரும் அதிமுக 100 ஆண்டு காலம் நிலைத்திருக்கும் என்று கூறி வந்தார் ஜெயலலிதா.

 போயஸ் தோட்டத்தில் படையல்

போயஸ் தோட்டத்தில் படையல்

ஜெயலலிதாவின் அந்த வார்த்தையை அவருடன் இருந்தவர்களும் அதிமுகவினரும் காப்பாற்றுவார்களா என்பது இப்போது சந்தேகமாகியுள்ளது. போயஸ் தோட்ட இல்லத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக 11வது நாள் துக்கம் அனுசரித்துவிட்டு, அவரது உருவப்படத்துக்கு முன்பாக படையல் போடப்பட்டு, சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்த உடன் சசிகலா, அமைச்சர்கள், எம்.எல்,ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோருக்கு வடை பாயாசத்துடன் விருந்து வைத்து அனுப்பிவைத்தார்.

 மாவட்ட நிர்வாகிகள்...

மாவட்ட நிர்வாகிகள்...

அதன்பிறகு மாவட்ட நிர்வாகிகள் தினசரியும் சந்தித்து சசிகலாவிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர். நேற்று மதுரை, காஞ்சி, நாமக்கல், கோவை, தேனி, புதுக்கோட்டை விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்ட நிர்வாகிகள் போயஸ் தோட்டத்துக்கு வந்தனர். அந்தச் சந்திப்பின்போது, அம்மா நீங்கள்தான் கட்சிக்கு தலைமை ஏற்கணும், நீங்கள்தான் பொதுச்செயலாளர் என்று சொன்னதும், கோரஸாக மாவட்ட நிர்வாகிகள் எழுந்து, அம்மா நீங்கள்தான் கட்சிக்குத் தலைமை ஏற்று எங்களை வழி நடத்தணும் என்று சொல்கின்றனர்.

 யார் யார்?

யார் யார்?

உங்களையும் கட்சியையும் நல்லபடியாக பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார் சசிகலா பின்னால் நிற்கும் பூங்குன்றமும், மகாலிங்கமும் முக்கியமான விஷயங்களைக் குறிப்பு எடுத்துக்கொள்கிறார்கள், தினகரனும், திவாகரும் சசிகலாவுக்குப் பின்பலமாக நிற்கின்றனர். இதுதான் இப்போது தினசரி நிகழ்வாகி வருகிறது.

 தேனியில் இருந்தே முதல்வர் குரல்

தேனியில் இருந்தே முதல்வர் குரல்

கட்சியில் பொதுச்செயலாளராக வேண்டும் என்ற நிலையைத் தாண்டி இப்போது சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கட்சியையும், ஆட்சியையும் தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என்றுதான் தற்போது மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் போடுகின்றனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் இருந்தே இந்த மாதிரியான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றி சசிகலாவிடம் கொண்டு வந்து அளித்தவர் தங்க தமிழ் செல்வன்.

கட்சியில் பொதுச்செயலாளராக வேண்டும் என்ற நிலையைத் தாண்டி இப்போது சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கட்சியையும், ஆட்சியையும் தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என்றுதான் தற்போது மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் போடுகின்றனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் இருந்தே இந்த மாதிரியான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றி சசிகலாவிடம் கொண்டு வந்து அளித்தவர் தங்க தமிழ் செல்வன்.

 அன்று ஓபிஎஸ் சதி..

அன்று ஓபிஎஸ் சதி..

தேனி மாவட்ட அதிமுகவில் பிரபலமாக இருந்த தங்கத்தமிழ் செல்வனை ஓரம் கட்டிய பெருமை ஓ.பன்னீர் செல்வத்திற்கு உண்டு என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. சைலண்டாக இருந்து கொண்டே... தனது சகாக்கள் மூலம் காய் நகர்த்தி கட்சியில் தனது முட்டுக்கட்டையாக இருந்தவர்களை சத்தமில்லாமல் வீழ்த்தி விட்டார் ஓ.பன்னீர் செல்வம் என்பார்கள்.

 வளர்த்த தங்கதமிழ்ச் செல்வன்

வளர்த்த தங்கதமிழ்ச் செல்வன்

ஓபிஎஸ்சை உருவாக்கிய குருநாதர் தங்கத்தமிழ் செல்வன்தான். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம், ஓபிஎஸ்சை அறிமுகம் செய்து வைத்தவரும் இவர்தான். இந்த அறிமுகம்தான் தேனி வந்த டிடிவி தினகரனுக்கு சகலமுமாக ஓபிஎஸ் மாற காரணமாக அமைந்தது.

 ஓரம் கட்டப்பட்ட ஓபிஎஸ்

ஓரம் கட்டப்பட்ட ஓபிஎஸ்

2001ம் ஆண்டு முதல்வர் பதவி வழங்கப்பட்டதால் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை ஓவர்டேக் செய்ய ஆரம்பித்தார் ஓபிஎஸ். ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்கி அவரின் அசைக்க முடியாத சக்தியாகவும் திகழ தொடங்கினார். திவாகரனை முதல்வர் ஆக்க முயற்சியில் ஈடுபட்டதால் 2011ம் ஆண்டு சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்டார். 2014ம் ஆண்டு ஓ.பன்னீர் செல்வத்தை 2வது முறையாக முதல்வர் ஆக்கியது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தால் சசிகலாவை, பன்னீர் செல்வம் ஓரம் கட்டினார்.

 ஓபிஎஸ் மீது நடவடிக்கை

ஓபிஎஸ் மீது நடவடிக்கை

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகி மீண்டும் முதல்வராகவே, ஓபிஎஸ் பற்றி உளவுத்துறை மூலம் போட்டுக் கொடுத்து சைலண்ட் ஆக்கினார் சசிகலா. தங்க தமிழ் செல்வனை மீண்டும் சீனுக்குள் கொண்டு வந்து தேனி மாவட்ட செயலாளர் ஆக்கினார் சசிகலா. இப்படி சசிகலா ஆதரவு பெற்றவர்கள்தான் கட்சியில் அதிகம் உள்ளனர்.

 தொடரும் ஓபிஎஸ் எதிர்ப்பு

தொடரும் ஓபிஎஸ் எதிர்ப்பு

முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலமின்றி மரணமடைந்த பின்னர் மீண்டும் முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம். இதை சசிகலா குரூப் மட்டுமல்ல, தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ் செல்வன் உள்ளிட்ட சிலர் விரும்பவில்லை என்றே தெரிகிறது. எனவேதான் முதலில் கட்சியின் பொது செயலாளர் என்ற கோஷத்தை முன்வைத்தவர்கள் இப்போது கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என்ற கோஷத்தை முன் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

 நிர்வாகிகள் ஆதரவு- தொண்டர்கள் எதிர்ப்பு

நிர்வாகிகள் ஆதரவு- தொண்டர்கள் எதிர்ப்பு

ஜெயலலிதாவின் தோழியும், அவருடன் 33 ஆண்டுகாலம் ஒரே வீட்டில் இருந்த சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளராக கட்சியின் முன்னணி தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள்ரீதியாக தடையேதும் இல்லை. ஜெயலலிதாவின் கஷ்ட நஷ்டங்களில் உடனிருந்தவர், அவரோடு சிறை சென்றவர், ஒன்றாகவே வாழ்ந்தவர் என்று, சசிகலாவை கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொள்வார்கள். தொண்டர்கள் இதை சசிக்க முடியாதவர்களாக உள்ளனர்.

 ஏற்பார்களா?

ஏற்பார்களா?

ஜெயலலிதாவிற்கு நெருக்கடி ஏற்பட்ட போது ஒபிஎஸ் ஐ முதல்வராக்கினார். அவரது ஆட்சியை ஒருமுறைக்கு இருமுறை மக்கள் பார்த்து பழக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஜெயலலிதாவை தலைவராகப் பார்த்து பழக்கப்பட்ட அதிமுக தொண்டர்கள், சசிகலாவை தலைவராக, முதல்வராக ஏற்றுக் கொண்டுள்ளார்களா என்பதுதான் கேள்விக்குறி.

English summary
Over a thousand party functionaries met on Thursday, passed the resolutions asking Sasikala to lead the party and the government said Theni district secretary Thangatamil Selvan, an MLA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X