ஆட்டோ டிரைவர் குழந்தைக்கு 'ஜெயலலிதா' என்று பெயர் சூட்டிய சசிகலா! உருகும் தொண்டர்கள்

தேனியை சேர்ந்த செந்தில்குமார்-காயத்திரி தம்பதிகளின் பச்சிளம் பெண் குழந்தைக்கு 'ஜெயலலிதா' என பெயர் சூட்டி சென்டிமென்ட் டச் கொடுத்துள்ளார் சசிகலா.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட ஆரம்பித்துள்ளார் அவரின் தோழி சசிகலா.

ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் சசிகலாவை அமர வைக்க தேவைப்படும் முன்னேற்பாடுகள், அச்சு பிசகாமல் எழுதி வைத்ததை போல நடந்து வருகிறது.

Sasikala naming a New born Baby as 'Jayalalitha'

பொறுப்பை ஏற்க அமைச்சர்கள், மூத்த அதிமுக தலைவர்கள் வலியுறுத்துவதாகவும், அதற்கு ஒரு துறவியை போல சசிகலா தலையை மறுப்பு தெரிவித்து அசைப்பதை போலவும் வெளியிடப்பட்ட வீடியோக்களை தமிழகம் கண்டது.

போயஸ் கார்டனுக்குள் குறிப்பிட்ட அளவு மக்களை அனுமதிக்கும் சசிகலா அவர்களிடம் ஜெயலலிதா மறைவுக்கு ஆறுதல் கூறுகிறார். ஜெயலலிதா அமரும் சீட்டில் அமர்ந்து வி.ஐ.பிகளையும் சந்திக்கிறார்.

இந்நிலையில், ஜெயலலிதாவை போலவே, பச்சிளம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் படலத்தையும் ஆரம்பித்துவிட்டார் சசிகலா. தேனியை சேர்ந்த செந்தில்குமார்-காயத்திரி தம்பதிகளின் பச்சிளம் பெண் குழந்தைக்கு 'ஜெயலலிதா' என பெயர் சூட்டி சென்டிமென்ட் டச் கொடுத்தார் அவர்.

ஜெயலலிதாவை பச்சிளம் குழந்தைகளையோடு சந்திக்கும் பெற்றோர் மனம் குளிர அவரும் பெயர் சூட்டி மகிழ்வது வழக்கம். புலிக் குட்டிகளுக்கு கூட பெயர் சூட்டி மகிழ்வது ஜெயலலிதாவின் வழக்கம். இப்போது அவரது செயல்பாடுகளை சசிகலா பின்தொடர ஆரம்பித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+