For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை முதல் பெங்களூரு வரை... சசிகலாவுக்கு எல்லாமுமாக உதவி செய்யும் 'ரஜினி'

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உதவி செய்யும் பணிப்பெண்ணின் பெயர் ரஜினி என்கிறது போயஸ் வட்டாரங்கள்.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவுக்கு எல்லாமுமாக இருந்தவர் சசிகலா. அவரது மறைவுக்கு பின்னர் தம்மையே உடை,நடை, சிகையில் டூப்ளிகேட் ஜெயலலிதாவாக்கிக் கொண்டார் சசிகலா. தற்போது சசிகலாவுக்கு எல்லாமுமாக இருப்பவர் பெயர் 'ரஜினி'.

ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட் சப்ளை செய்வதற்காக போயஸ் கார்டனில் நுழைந்தவர் சசிகலா. பின்னர் பணிவிடையின் பெயரால் ஒட்டுமொத்தமாக போயஸ் கார்டனிலேயே குடியிருந்துவிட்டார்.

சொத்துகள் குவிப்பு

சொத்துகள் குவிப்பு

ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்துக்கு வர அந்த ஆட்சியே தங்களுடையது என கனவு காண தொடங்கியது சசிகலா குடும்பம். அரசாங்க சொத்துகளை சூறையாடி சொத்து குவித்து பேராசையைத் தீர்த்துக் கொண்டது.

துரத்தியடிப்பு

துரத்தியடிப்பு

ஜெயலலிதா மருத்துவமனையில் மறைந்தாலும் அவரது மர்ம மரணத்தில் சசிகலாவின் பங்கு என்ன என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் உடனேயே இருந்த மெடிக்கல் நர்ஸ், பணிப்பெண் என பலரும் போயஸ் கார்டனை விட்டு துரத்தப்பட்டனர்.

புதிய பணிப்பெண்

புதிய பணிப்பெண்

அவர்களுக்குப் பதிலாக ஒரு பெண்ணை பணிவிடை செய்ய சசிகலா அமர்த்தியிருக்கிறார். அந்த பெண்தான் ஜெயலலிதாவின் காரில் சசிகலா முன்பு அமர்ந்த பின்வரிசை சீட்டில் தற்போது அமர்ந்திருக்கிறார்.

கூவத்தூர், பெங்களூரு

கூவத்தூர், பெங்களூரு

கூவத்தூருக்கு சசிகலா போனபோதும் சரி பெங்களூருக்கு போனபோதும் சரி இந்த பெண்ணைத்தான் சசிகலா அழைத்துச் சென்றார். பெங்களூருவில் சசிகலா சிறைக்குப் போன பின்னர் அங்கே ஒரு ஹெஸ்ட் ஹவுசில்தான் இந்த பெண் தங்கியிருக்கிறாராம்.

ரஜினி

ரஜினி

சசிகலாவுக்கான பொருட்களை கொண்டு போய் கொடுப்பது தொடங்கி சகல வேலைகளையும் தற்போது இந்த பெண்தான் செய்து வருகிறாராம். இவரது பெயர் 'ரஜினி' என்கிறது போயஸ் வட்டாரங்கள்.

English summary
ADMK Sources said that Sasikala Natarajan's maid name as Rajini.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X