சிறைக்கு போனாலும் சசிகலா திருந்தவே மாட்டார்... ஜி. ராமகிருஷ்ணன் சுளீர்
பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, திருந்தவே மாட்டார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வாழ்க்கை வசதிகள் கொடுக்க சிறைத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதற்கு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ' சசிகலா திருந்தவே மாட்டார் என்பதற்கு இதுதான் உதாரணம்' என்று தெரிவித்தார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா, கடந்த வாரம் அச்சிறையில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடந்த முறைகேடுகள் குறித்து அவருக்கு தெரிய வந்தது. பின்னர் அது தொடர்பாக அவர் மேல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். சிறையில் வசதிகளை கொடுக்க சசிகலாவிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்றும் புகாரில் ரூபா கூறி அதிர வைத்திருந்தார்.

நாடு முழுவதும் பெரிய அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் இன்று இன்னொரு கட்டத்தை அடைந்துள்ளது. புகார் கூறிய டிஐஜி ரூபா பணி இடமாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், டிஐஜி ரூபா கூறிய புகாருக்கு வலு சேர்க்கும் வகையில் சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பது ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. சசிகலா சொகுசாக இருக்கும் சிறை அறைகளின் படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், "தமிழக அரசியல் உலகை ஊழல் மயமாக்கிய குடும்பம் சசிகலா குடும்பம். அதை இப்போது மீண்டும் அவர் நிரூபித்து உள்ளார்.
பொதுவாக தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலத்திலும் கையூட்டு பெற்றுக் கொண்டு சிறை அதிகாரிகள் செயல்படுவது வழக்கமாக உள்ளது. அது பெங்களூருவிலும் நடந்துள்ளது. எனவே, இதற்கு உடைந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறு செய்துவிட்டு தண்டனை பெரும் நிலையில், சசிகலா மேலும் மேலும் குற்றம் செய்கிறார். இந்த தவறுகள் மீதும் சட்ட ரீதியிலான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று சசிகலா செயல்படுவதற்கு அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications