விஷ்ணுபிரியா என்னுடைய 'ஐஏஎஸ் மேட்'.... அதிரடி காட்டும் சசிகலா புஷ்பா...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தம்முடன் ஐஏஎஸ் படித்தவர் என்றும் எந்த ஒரு தலைவரையும் யாரும் பின்னாடி இருந்து இயக்கக் கூடாது எனவும் ராஜ்யசபா எம்.பி. சசிகலா தெரிவித்துள்ளார்.
போலி முன்ஜாமீன் மனு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராவதற்காக நள்ளிரவு சென்னை வந்தார் சசிகலா புஷ்பா. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதாவது:

- நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுத்து ஆஜராக குடும்பத்துடன் வந்துள்ளேன்.
- இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.
- நீதிமன்றம் முடித்துவிட்டு செல்லும் வரை எதுவும் சொல்ல முடியாது.
- டெல்லி நீதிமன்றம் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி உள்ளது.
- தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழங்குவார்கள் என நினைக்கிறேன்.
- ஒரு எம்.பி.யாக இருந்தால் 4 ஆண்டுகளுக்கு எந்த கட்சியிலும் நான் சேர முடியாது என்பது சட்டம்.
- ஆகையால் பிற கட்சியில் சேருவது பற்றி இப்போது பேச வேண்டாம்.
- எனது நடவடிக்கைகள் என்ன என்பதை போக போக பொறுந்திருந்து பாருங்கள்.
- ஒருவர் குற்றம்சாட்டினால் மற்றொருவர் மறுப்பது ஜனநாயகத்தின் இயல்பு தான்.
- பெண்களுக்கு எப்போதுமே பாதுகாப்பும் மரியாதையும் வேண்டும்.
- பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக ஊடகங்கள் தான் சரியான பணியை செய்து வருகின்றன.
- ஊடகங்கள் பாதுகாப்பு தருவீர்கள் என்று நம்பி தான் நான் வந்தேன். நீங்கள் சரியாக செயல்பட்டதால்தான் நான் இங்கு நடமாட முடிந்தது. உங்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- பெண்களை அசிங்கப்படுத்தாதீர்கள். களங்கப்படுத்தாதீர்கள்.
- சுவாதியாக இருக்கட்டும் விஷ்ணு பிரியாவாகட்டும் யாரையும் களங்கப்படுத்தாதீர்கள்.
- தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி விஷ்ணு பிரியா என்னுடன் ஜ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்த பெண்.
- பெண்களை கவுரப்படுத்தி மரியாதையுடன் அரசுப் பணியை செய்ய வழிவிட வேண்டும்.
- நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை.
- எந்த கட்சியாகவும் இயக்கங்கள், தலைவராகவும் யாராக இருந்தாலும் தானாக இயங்க வேண்டும்.
- சூரியன் தானாக இயங்குகிறது. பின்னால் ஒருவர் இருந்து இயக்க கூடாது.
- பின்னால் இருந்து இயக்குபவர் பெயரை கேட்டால் நன்மை இருக்காது. அது கட்சிக்காரர்களுக்கும் சரி என்னை போன்ற பெண்களுக்கும் சரி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications