ஆட்சி போனால் போகட்டும்... நான் ராஜினாமா செய்ய முடியாது - ஒரேயடியாக போட்ட சசிகலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஓபிஎஸ் அணியின் நிபந்தனைப்படி அதிமுக பொதுச்செயலர் பதவியை தாம் ஒருபோதும் ராஜினாமா செய்யவே முடியாது என பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகள் ஒன்றாக இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் ஓபிஎஸ் அணியினர் சசிகலா, தினகரன் ராஜினாமா கடிதம் வேண்டும்; சசிகலா குடும்பத்தினர் 30 பேரை கூண்டோடு நீக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது.

கொந்தளித்த சசிகலா

கொந்தளித்த சசிகலா

இது தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிபந்தனையைக் கேட்டவுடன் சசிகலா கொந்தளித்துவிட்டாராம்.

தினகரனுக்கு உத்தரவு

தினகரனுக்கு உத்தரவு

அத்துடன், முதலில் தினகரனின் தலையீடு வேண்டாம் என்று கூறினார்கள்... சரி என தினகரனை ஒதுங்கி இருக்க சொல்லிவிட்டேன்.. அவரும் ஒதுங்கிவிட்டார்.. இப்போது கூடுதல் நிபந்தனை விதித்தால் எப்படி? என எகிறியிருக்கிறார்.

ஆட்சி போகட்டுமே

ஆட்சி போகட்டுமே

மேலும் இந்த ஆட்சியையே நான் உருவாக்கியது... ஓபிஎஸ் கோஷ்டி இணைந்தால்தான் ஆட்சி நிலைக்கும் என்றால் அப்படி ஒன்று தேவையே இல்லை.. ஆட்சி போனாலும் பரவாயில்லை... நீங்க தேர்தலில் நின்று ஜெயித்து வாங்க.. அதன்பின்னர் ராஜினாமா செய்கிறேன் என கூறியிருக்கிறாராம் சசிகலா.

ஓபிஎஸ் கோஷ்டிக்கு தூது

ஓபிஎஸ் கோஷ்டிக்கு தூது

சசிகலாவின் இந்த திட்டவட்ட முடிவு ஓபிஎஸ் அணிக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். தற்போது எடப்பாடி கோஷ்டியோ, பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூக முடிவை எட்டலாம் என ஓபிஎஸ் கோஷ்டிக்கு தூது அனுப்பியுள்ளதாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK Sources said that Sasikala refused to resign from the Party Interim General Secretary post.
Please Wait while comments are loading...