சசிகலா ஒரு சிறந்த ராஜ தந்திரி.. ஆனால் ஜெ. மரணத்திற்கும் அவரே காரணம்.. பொன்னையன் "சுளீர்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா ஒரு சிறந்த ராஜ தந்திரி, அரசியல் ஞானமிக்கவர் என ஓபிஎஸ் அணியின் பொன்னையன் தெரிவித்துள்ளார். ஆனால் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பொன்னையன் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சிறப்பு நேர்க்காணல் அளித்தார். அப்போது சசிகலா குடும்பத்தினர் மீதான வெறுப்புக்கு காரணம் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன.

Sasikala should explain Jayalalitha's mistry death: Ponnaiyan

அதற்கு பதிலளித்த பொன்னையன் சசிகலா ஒரு சிறந்த ராஜதந்திரி, அரசியல் ஞானம் நிரம்பப்பட்டவர். ஆனால் ஜெயலலிதா மரணத்துக்கு அவர் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அவர் விளக்கம் அளித்தாக வேண்டும். விளக்கம் அளிக்க அவர் தவறியதால்தான் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு நான் விலகி வந்தேன் என்று அவர் கூறினார்.

33 ஆண்டுகளாக சசிகலாதான் ஜெயலலிதா கூடவே இருந்தார். ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த சிகிச்சை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பொன்னையன் சுட்டிக்காட்டினார்.

மருத்துவமனையிலும் யாரையும் பார்க்க அனுமதிக்காமல் சசிகலாதான் உடனிருந்தார். ஜெயலலிதா சிகிச்சைப்பெற்ற வீடியோக்களும் வெளி வரவில்லை.

எனவே அவர்தான் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து தெளிவு படுத்த வேண்டும் என்றும் பொன்னையன் வலியுறுத்தினார். ஜெயலலிதாவை சசிகலா தான் கொன்றார் என்ற ஆதராங்களுக்கு அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் பொன்னையன் வலியுறுத்தினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ponnaiyan gives exclusive interview to a private TV chennal. He said Sasikala should explain Jayalalitha's mistry death.
Please Wait while comments are loading...