நிருபர்களுக்கு சசிகலா நக்கல் பதில்.. நீங்கள் புத்திசாலிகள் தானே என கிண்டல் வேறு!
கூவத்தூரில் பெரும் போராட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா அவர்களின் கேள்விகளுக்கு நக்கலாக பதிலளித்தார்.
சென்னை: கூவத்தூரில் பெரும் போராட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா அவர்களின் கேள்விகளுக்கு மிக நக்கலாக பதிலளித்தார். எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்லாத அவர் செய்தியாளர்களையே திருப்பி கேள்வியாக கேட்டு வெறுப்பேத்தினார்.
அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதை தடுக்கும் வகையில் அவர்களை மன்னார்குடி கும்பல் சென்னையை அடுத்த கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளது. அவர்களை செய்தியாளர்கள் சந்திக்க தடைவிதிக்கப்பட்டது.
நேற்று எம்எல்ஏக்களை சந்திக்க சென்ற சசிகலாவை பின்தொடர்ந்து செல்ல முயன்ற செய்தியாளர்களை மன்னார்குடி கும்பலால் குவிக்கப்பட்டுள்ள குண்டர்கள் தாக்கினர். அவர்களின் கேமரா உள்ளிட்ட கருவிகளையும் பிடுங்கிக்கொண்டனர்.

நக்கலாக பதிலளித்த சசி
இதனால் ஆத்திரமடைந்த செய்தியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சசிகலாவின் வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நக்கலாகவே பதிலளித்தார்.

எந்த பத்திரிக்கை என மிரட்டல்
நீங்கள் எந்த பத்திரிக்கை என மிரட்டிய அவர் நீங்கள் எல்லாம் புத்திசாலிகள் தானே என கிண்டலடித்தார். மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் செய்தியாளர்களை திருப்பி கேட்டு வெறுப்பேத்தினார்.

உற்சாகப்படுத்திய ஆதரவாளர்கள்
அவ்வப்போது தன்னை சுற்றி நின்றிருந்த தனது ஆதரவாளர்களை பார்த்தும் அவர் சிரித்துக்கொண்டார். சசிகலாவின் இந்த செய்கையை அவரை சுற்றியிருந்த அவரது ஆதரவாளர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

திரும்பி பார்க்கக் கூடாது
சசிகலாவின் இந்த நடவடிக்கை செய்தியாளர்கள் இனி தன்பக்கம் திரும்பிக்கூட பார்க்கக்கூடாது என்பது போல் இருந்தது. அதேநேரத்தில் சசிகலாவின் பேச்சால் செய்தியாளர்களும் கொந்தளித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications