For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலையில் சிதறி கிடந்த ஜல்லிகற்கள்.. விபத்தை தடுக்க சாத்தான்குளம காவலர் செய்த மாஸ் காரியம்!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: சாலையில் சிதறி கிடந்த ஜல்லியினால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தவறி விழும் ஆபத்து இருந்தது. இதை யாரையும் எதிர்பார்க்காமல் சாத்தான்குளம் காவலர் சின்னத்துரை என்பவர் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பொதுவாக விபத்தில் சிக்க காரணம், அங்குள்ள பள்ளங்கள், அதேபோல் சாலையோரங்களில் குவிக்கப்பட்டும் ஜல்லி கற்கள். இவற்றால் அதிகம் பேர் எளிதாக விபத்தில் சிக்குகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் வருவோரே விபத்தில் அதிகம் சிக்கி பாதிக்கப்படுகிறது.

Scattered pebbles on the road; Good deeds done by the police to prevent the accident

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புதிய பாலம் அருகில் ரோட்டில் சிதறி கிடந்த ஜல்லியினால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.

Scattered pebbles on the road; Good deeds done by the police to prevent the accident

இதை நெடுஞ்சாலை துறை கண்டு கொள்ளாமல் இருந்தததாக கூறப்படுகிறது விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சாத்தான்குளம் காவல் நிலைய முதல் நிலைய காவலர் சின்னத்துரை என்பவர் ஜல்லியை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தார். இவரது இந்த தன்னலமற்ற சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

English summary
Motorcyclists were at risk of falling due to the scattered gravel on the road. Unexpectedly, Sathankulam policeman Chinnathurai cleaned the area with a broom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X