For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஸ்கீம்' தமிழகத்திற்கு தண்ணீர் தராது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் பகீர் வாதம்!

சேகர் நாப்தே வாதிடுகையில், காவிரி மேலாண்மை வாரியம் இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் தண்ணீர் வருவதில்லை என்றார். அப்போது வேணுகோபால் குறுக்கிட்டு, "செயல் திட்டத்தால் (ஸ்கீம்), உங்களுக்கு தண

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி விவகாரம்..மத்திய அரசுக்கு மே 14-ந் தேதி வரை கால அவகாசம்- வீடியோ

    டெல்லி: காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்ற வாதத்தின்போது, மத்திய அரசின் பூனை குட்டி வெளியே வந்துவிட்டது என்று தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது, மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்யாமல் கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் கேட்டது.

    தமிழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    தண்ணீர் கிடையாது

    தண்ணீர் கிடையாது

    சேகர் நாப்தே வாதிடுகையில், காவிரி மேலாண்மை வாரியம் இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் தண்ணீர் வருவதில்லை என்றார். அப்போது வேணுகோபால் குறுக்கிட்டு, "செயல் திட்டத்தால் (ஸ்கீம்), உங்களுக்கு தண்ணீர் கிடைக்காது" என்றார்.

    பூனை குட்டி

    பூனை குட்டி

    இதை கேட்டு சேகர் நாப்தே அதிர்ச்சியடைந்தார். "பார்த்தீர்களா, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. வலுவற்ற ஒரு அமைப்பைதான் மத்திய அரசு உருவாக்க முயல்வது இதன் மூலம் தெரியவருகிறது" என்றார்.

    உச்சநீதிமன்றம் உறுதி

    உச்சநீதிமன்றம் உறுதி

    அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, "எங்கள் உத்தரவுகளை செயல்படுத்தும் அமைப்பை உருவாக்கும் திட்டத்தைதான் உருவாக்க நாங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளோம்" என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் உறுதியாக தெரிவித்தார். இவ்வாறு வாதம் நடைபெற்றது.

    சொட்டு தண்ணீரும் கிடைக்காது

    சொட்டு தண்ணீரும் கிடைக்காது

    மத்திய அரசு வழக்கறிஞரின் இந்த லகுவான வாதம், காவிரி விஷயத்தில் மத்திய அரசு எந்த மாதிரி நிலைப்பாட்டில் உள்ளது என்பதை வெளிக்காட்டுவதாகவே உள்ளது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். தமிழக அரசு தனது வாதத்தில், மத்திய அரசை நம்பினால், தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரும் காவிரியில் இருந்து கிடைக்காது. உச்சநீதிமன்றம்தான், அதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    TN Counsel Naphade says, See, now the cat comes out. This is the real habit of central govt. They are going to form a toothless body.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X