For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 9 பள்ளிகள், காஞ்சிபுரத்தில் 10 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் 9 பள்ளிகள் தவிர பிற பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. கனமழை கொட்டித் தீர்த்ததால் சென்னை தத்தளித்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Schools to be re-opened today

ஒரு வாரம் கழித்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சென்னையில் புரசைவாக்கம், தி.நகர், ராயபுரம், வேப்பேரி, வேளச்சேரி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 9 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பள்ளிகளை தவிர பிற பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இதே போன்று திருவாரூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் தவிர பிற பள்ளிகள் இன்று இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார் கலெக்டர்.

சென்னை புறநகர்களில் கன மழை:

காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட சென்னை புறநகர்களான குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலையிலிருந்து விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இருப்பினும் இங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

English summary
All schools in Chennai except nine schools will be re-opened today after one week. Schools were closed because of heavy rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X