திருப்பரங்குன்றம் மலை மீது ஏற தடை! காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா செல்ல அனுமதி இல்லை!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத்தூணில் விளக்கேற்றாததை கண்டித்து பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி அங்கு வன்முறையில் ஈடுபட்டதால் மலை மீது செல்ல 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினருடன் (சிஐஎஸ்எஃப்) திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று மாலை உத்தரவிட்டார்.

இதையடுத்து மனுதாரர்களான ராமரவிக்குமார் , இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்டோர் சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் நேற்று இரவு திருப்பரங்குன்றம் சென்றனர். முருகன் கோயிலுக்கு அருகில் உள்ள பழனியாண்டவர் கோயில் பாதை வழியாக மலை உச்சிக்குச் செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களை போலீஸார் தடுப்பு வேலிகளை போட்டு அவர்களுக்கு அனுமதி மறுத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படவில்லை என கூறி இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி முழக்கமிட்டனர்.
அப்போது திடீரென தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயம் அடைந்தார். இதையடுத்து தீபம் ஏற்ற பாஜகவினர் முன்னோக்கி சென்ற போது அவர்களை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர். அது போல் போலீஸார் தடுப்பை மீறி மலை பாதையில் ஓடிச் சென்றவர்களை பிடித்து வந்து வேனில் ஏற்றினர்.
இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப் வீரர்களும் மலை மீது செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதே நிலையில் அவர்கள் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications