ஜெ. தீர்ப்பு.. கருணாநிதி அவசர ஆலோசனை- வீடு, அறிவாலயத்திற்குப் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவி்ப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாவதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் வீடுகள், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. இதனால் பெங்களூரே பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், கண்காணி்பும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் வீட்டிற்குப் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு இடங்களிலும் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். தீர்ப்பு ஜெயலலிதாவுக்குப் பாதகமாக வந்தால் அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில் திமுகவினர் பெருமளவில் இங்கு குவிந்து வருகின்றனர். அதேபோல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டிலும் திமுகவினர் குவிந்துள்ளனர்.
கருணாநிதி ஆலோசனை
இந்த நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கருணாநிதி அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர். தீர்ப்புக்குப் பிந்தைய அரசியல் சூழலை சமாளிப்பது எப்படி என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications