For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாக்குதல் அச்சம்... திருமடங்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: ராம.கோபாலன்

Google Oneindia Tamil News

Security should be tightened in all Hindu madams: Rama.Gopalan
சென்னை: காசி திருமட சம்பவத்தைத் தொடர்ந்து இந்து திருமடங்கள் அந்நிய ஊடுருவல்களுக்கும், தாக்குதல்களுக்கும் இலக்காகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அவற்றின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

24-8-2014 அன்று காலை திருப்பனந்தாள் காசி திருமடத்துள் 22 வயது மதிக்கத்தக்க சையது இப்ராகிம் என்பவர் நுழைந்துள்ளார். சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய அவரை மடத்தைச் சார்ந்தவர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட சையது இப்ராகிமிடம் திருமடத்தைச் சுற்றி எடுத்த புகைப்படங்கள் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த சையத் இப்ராகிம் மீது சிலை கடத்தல் வழக்குகள் மற்றும் கொள்ளையடித்தல் போன்ற வழக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்து திருமடங்களும் இப்போது அந்நிய ஊடுருவல்களுக்கும், தாக்குதல்களுக்கும் இலக்காகும் அச்சமான ஒரு சூழ்நிலை இந்த நிகழ்வின் மூலம் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆகவே, தமிழக அரசும், காவல்துறையும் மிகுந்த விழிப்புணர்வுடன் இந்து ஆலயங்கள், திருமடங்கள் மற்றும் ஆன்மீக ஸ்தாபனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். காவல்துறை எல்லா கோணங்களிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The Hindu munnani leader Rama.Gopalan has demanded the government to tighten the security in all hindhu religious madams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X