
கர்நாடகத்தில் பாஜக ஆட்சியின்போதும் தமிழகத்துக்கு முறையாக காவிரி நீர் கிடைக்கவில்லை- சீமான்
Recommended Video

சென்னை: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியின்போதும் தமிழகத்துக்கு முறையாக காவிரி நீர் வரவில்லை என்று சீமான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.
காவிரிக்கான போராட்டத்துக்கு மத்தியில் சென்னையில் ஐபிஎல் நடத்தக் கூடாது என்று பாரதிராஜா, அமீர், மணியரசன், சீமான், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது சீமான் கூறுகையில் கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவிரி தமிழகத்தில் பாய்ந்தோடும் என்கிறார்கள். ஆனால் பாஜக ஆட்சியின்போதும் தமிழகத்திற்கு முறையாக நீர் திறக்கவில்லை.
தமிழ்நாட்டிற்கென கொடி கொண்டுவந்தது தேசிய விரோதமல்ல. கர்நாடகத்தில் தனிக்கொடி மூலம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதுபோல் ஐபிஎல் , காவிரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சென்னையில் வரும் 20-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது. மீறி நடத்தினால் எங்களது போராட்டங்கள் வேறு மாதிரி இருக்கும் என்றார் சீமான். மேலும் ரஜினிக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்தார்.