விலைமதிப்பற்ற உயிர்களை இழப்பது வேதனை தருகிறது.. ஷாலினி மறைவுக்கு சீமான் இரங்கல்
Recommended Video

சென்னை: மாலைமுரசு செய்தியாளர் ஷாலினி சாலை விபத்தில் மரணமடைந்ததற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதகுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:
மாலைமுரசு தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்த ஈரோட்டை சேர்ந்த தங்கை சாலினி அவர்கள் நேற்று 15-07-2018 இரவு சேலத்திலிருந்து செய்தி சேகரித்துவிட்டு மகிழுந்தில் மதுரை திரும்பும் வழியில் திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் சிக்குண்டு மரணமடைந்தார் என்பதையறிந்து மிகுந்த மனவேதனையுற்றேன்.

தொடர் பயணங்கள் நிறைந்த செய்தியாளர் பணியில் உயிர் பாதுகாப்பு மிகவும் முக்கியம். உண்ண, உறங்க நேரமின்றி பயணிப்பது; இடவார் (Seat Belt), தலைக்கவசம் (Helmet) போன்றவற்றை பயன்படுத்தாதது, இரவு நேரங்களில் அதிவேகப் பயணம் போன்றவற்றால் மிகச்சிறந்த ஆளுமைகளின் விலைமதிப்பற்ற உயிரை இழக்கநேரிடுவது மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
என் உயிருக்கினிய தம்பி தங்கைகள் இனியேனும் சாலை விதிகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். தங்கை சாலினியை இழந்துவாடும் பெற்றோர், உறவினர், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தம்பிகள் இராம்குமார், சதீஷ் ஆகியோர் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications