சிறு, குறு தொழில்களை நசுக்கும் ஜிஎஸ்டி வரி... கொந்தளிக்கும் சீமான்
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியினால் சிறு மற்றும் குறு தொழில்கள் நலிவடைந்து போய் விடும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியினால் அதிகம் பாதிக்கப்படுவது சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள்தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரியினால் சமான்ய மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றும் சீமான் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியை பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.

சரக்கு மற்றும் சேவை வரி மாநில அரசின் உரிமைகளை பறிப்பது போல உள்ளது. நாம் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பொருட்களுக்கு மத்திய அரசு வரி விதிக்கிறது. இதனால் மாநில அரசுகளுக்கு எந்த பயனும் இல்லை. எது வேண்டும் என்றாலும் மத்திய அரசை எதிர்பார்க்க வேண்டும்.
ஜிஎஸ்டி வரியினால் பெரிய நிறுவனங்களுக்கு தான் நன்மை. சிறு, மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு பலன் ஏதுமில்லை அவரை நசிந்து விடும் என்றார்.
சினிமா டிக்கெட்டிற்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு கேளிக்கை வரி விதித்துள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும் என்றும் சீமான் கூறினார்.
ஹோட்டல்களில் அதிக வரி, எதற்கெடுத்தாலும் வரி போட்டால் சாமானிய மக்கள் என்ன செய்வார்கள். ஜிஎஸ்டியினால் ஏழை மற்றும் சாமானிய மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் சீமான் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications