தமிழக அரசியலில் ரஜினி புஸ்வாணமாகி விடுவார் - சீமான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தீபாவளிக்கு வைக்கும் பெரிய வெடி வெடிக்காமல் போவது போல் ரஜினியும் புஸ்வாணமாகி விடுவார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

மே மாதத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று பேசினார்.

Seeman slams on Actor Rajinikanth

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். ஆனால் ரஜினி மராட்டியர் என்றும் கன்னடர் என்றும் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தை தமிழர்தான் ஆளவேண்டும் என்று கூறி வருகிறார் சீமான்.

இதனிடையே ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது காலா படத்தில் படப்பிடிப்பு முடிந்த உடன் ரஜினி ரசிகர்களை சந்திப்பார் என்று கூறியுள்ளனர். பிறந்தநாளில் அரசியல் நிலைப்பாடு பற்றி அறிவிப்பார் ரஜினி என்று கூறி வருகின்றனர்.

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இதனிடையே நாம் தமிழர்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. ரஜினியின் இந்தப் பேச்சுக்கு, ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. சீமான் கடுமையாக எதிர்த்து வருகிறார். தமிழகத்தை ஆளவேண்டும் என்று ரஜினிகாந்த் நினைக்கக்கூடாது என்று கூறியிருந்தார் சீமான்.

தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தீபாவளிக்கு வைக்கும் பெரிய வெடி வெடிக்காமல் போவது போல் ரஜினியும் புஷ்வாணமாகி விடுவார் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால்தான் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளித்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Naam Tamilar Party leader Seeman angry talks about Actor Rajinikanth.BJP ruling party in TamilNadu thats why ADMK support for BJP presidential candidate support.
Please Wait while comments are loading...