தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது குறித்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: தமிழகத்தில் காலச்சூழ்நிலை அறிந்து பள்ளிக் கூடங்கள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.

இதையடுத்து, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை 10 நாள்களுக்கு தமிழக அரசு ஒத்தி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தனியார் பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து முன்னாள் ஹகோர்ட் நீதிபதி மாசிலாமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் கடந்த ஒரு மாதங்களாக தனியார் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆய்வின் போது அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு பள்ளிக்கூடங்களில் யோகா, விளையாட்டு, சாலை விதிகள், தேசப்பற்று ஆகியவை குறித்து மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடந்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறப்பது குறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் காலச்சூழ்நிலை அறிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications