வேலூர்: செந்தூரன் ஜாமீனில் விடுதலை!.... செங்கல்பட்டு முகாமிற்கு சென்றார்
வேலூர்: ஈழத்தமிழர் செந்தூரனுக்கு வேலூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து செங்கல்பட்டு முகாமில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க சென்றார்.
கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஈழத்தமிழர் செந்தூரன், தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார்.

தொடர்ந்து 22 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த செந்தூரனுக்கு கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி உடல்நிலை மிகவும் மோசமானது.
இதனால், செந்தூரனை சிறைத்துறை அதிகாரிகள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பார்க்க வந்த அவரது மனைவி மங்கையர்க்கரசியை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
அதையடுத்து மங்கையர்கரசி தனது கணவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கணவனை மங்கையர்க்கரசி சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து உண்ணாவிரதத்தை செந்தூரன் முடித்துக் கொண்டார்.
இந்த நிலையில் செந்தூரன் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், "என் குடும்பம் செங்கல்பட்டில் உள்ளது. அதனால் நான் அங்குள்ள அகதிகள் முகாமிற்கு செல்ல ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், செந்தூரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதை தொடர்ந்து அவர் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமுக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் செந்தூரன் அழைத்து செல்லப்பட்டார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications