வேல்முருகனுக்கு சிறுநீரகம் பாதிப்பு: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
வேல்முருகனுக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video

சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து ஆறுதல் தெரிவிக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை, விழுப்புரம் போலீஸார் கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைத் தாக்கிய வழக்கில் அவரை 15 நாட்கள் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், வேல்முருகன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை நேற்று வாபஸ் வாங்கினார்.
ஆனால், நேற்று மாலை அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதனால் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கும் வேல்முருகனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications