நெல்லையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. இங்கிலாந்து போதகருக்கு 3 ஆண்டுகள் சிறை

Posted By: KMK ESAKKIRAJAN
Subscribe to Oneindia Tamil

நெல்லை: வள்ளியூரில் 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இங்கிலாந்து மதபோதகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சின்னம்மாள்புரத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து கிரேல் டிரஸ்ட்’ என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோனதான் ராபின்சன் நடத்தி வந்தார்.

sexually abused 15 years old boy 3 years imprisonment for uk religious priest

இந்நிலையில் இந்த இல்லத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுவனை சென்னை, புதுடெல்லி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று மதபோதகர் ராபின்சன் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெங்களூரிலுள்ள ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வள்ளியூர் போலீஸில் புகார் அளித்தது.

இதன்பேரில் ஜோனதான் ராபின்சன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனையறிந்த ஜோனதான் ராபின்சன் இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார். பின்னர் அவரை சர்வதேச போலீஸாரின் துணையுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் வள்ளியூர் நீதிமன்றத்தில் கடந்த 26.11.2015-ல் ராபின்சன் முன்னிலையில் அவர் சரணடைந்தார். விசாரணை முடிந்து, இவ்வழக்கில், ஜோனதான் ராபின்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The UK religious priest who has been sexually abused 15 years old in Valliyur has been sentenced to 3 years imprisonment.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற