Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

14 ஆண்டு சேவை.. விவசாய குடும்பத்தில் பிறந்து பல ஐஏஎஸ்களை உருவாக்கியவர்.. சங்கர் தற்கொலை!

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    'சங்கர் ஐஏஎஸ் அகாடமி' நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை!- வீடியோ

    சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னை அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் இவர் சிவில் சர்விஸ் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வந்தார்.

    இந்த அகாடமி தமிழகம் முழுக்க பிரபலம். இந்த நிலையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வருகிறது.

    [சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் தற்கொலை!]

    எங்கு பிறந்தார்

    எங்கு பிறந்தார்

    திருச்செங்கோடு அருகே உள்ள நல்லன்கவுண்டம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர் சங்கர் தேவராஜன். இவரது குடும்பம் மிகவும் வறுமையான குடும்பம் ஆகும். இவருக்கு சிறு வயதில் இருந்து சினிமா பட இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. இதனால் சரியாக படிக்காமல் இருந்துள்ளார்.

    மிகவும் மோசம்

    மிகவும் மோசம்

    ஆனால் கடைசியில் பள்ளி இறுதி நாட்களில் சரியாக படித்து கல்லூரியில் சேர்ந்து உள்ளார். பிஎஸ்சி அக்ரி படிப்பில் சேர்ந்த இவர் அங்கு சென்று மோசமாக படித்துள்ளார். அங்கு வைஷ்ணவி என்ற பெண்ணை ராக்கிங் செய்துள்ளார். இதன் காரணமாக, இவர் கல்லுரியில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக இவரது தாத்தா இவரிடம் கடைசி வரை பேசாமலே மரணம் அடைந்தார். இதுதான் இவர் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் ஆகும்.

    காதல் கல்யாணம்

    காதல் கல்யாணம்

    அதன்பின் சரியாக கல்லூரிக்கு சென்றவர் தீவிரமாக படித்துள்ளார். இவரது மாற்றத்தை பார்த்த அந்த ராக்கிங் செய்யப்பட்ட பெண் வைஷ்ணவி இவர் மீதே காதலில் விழுந்துள்ளார். அதன்பின் சங்கரும் வைஷ்ணவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதே சமயம் இவருக்கு ஐஏஎஸ் கனவும் இருந்துள்ளது.

    நான்கு முறை

    நான்கு முறை

    இவர் மொத்தம் 4 முறை ஐஏஎஸ் ஆக ஆசைப்பட்டு சிவில் சர்விஸ் தேர்வு எழுதியுள்ளார். இதில் இரண்டு முறை இறுதிச்சுற்று வரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒருமுறை கூட தேர்வாகவில்லை. இதனால் மனமுடையாமல், ஐஎஸ்எஸ் பயிற்சி மையம் ஆரம்பித்தால் என்ன என்று முடிவிற்கு வந்தவர் தொடங்கியதுதான் சங்கர் ஐஏஎஸ் அகாடமி.

    தொடங்கி சேவை

    தொடங்கி சேவை

    14 வருடங்களுக்கு முன் இவர் இந்த அகாடமியை தொடங்கினார். அம்மா கொடுத்த வெறும் 720 ரூபாயை வைத்துக்கொண்டு சிறிதாக இந்த அகாடமி தொடங்கப்பட்டது. இது இப்போது சென்னையின் நம்பர் 1 ஐஏஎஸ் அகாடமி ஆகும்.

    300 பேர் வருடத்திற்கு

    300 பேர் வருடத்திற்கு

    வருடத்துக்கு இங்கிருந்து 300 பேர் சிவில் சர்விஸ் பணிகளில் தேர்வாகிறார்கள். இவரது அகாடமியில் படிக்க வெளிமாநிலத்தில் இருந்து கூட நபர்கள் வருகிறார்கள். நிறைய ஐஏஎஸ்களை உருவாக்கிய சிறப்பு இவருக்கு உண்டு.

    உதவி

    உதவி

    அதேபோல் வறுமையான கிராமப்புற மாணவர்களுக்கு நிறைய உதவி இருக்கிறார். பலருக்கு இலவசமாக பயிற்சி அளித்த சிவில் சர்விஸ் பணிகளை பெற வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று இவர் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் பல மாணவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+