'நடிகர் திலகம்' சிவாஜிக்கு அவமரியாதை... தமிழக அரசுக்கு எதிராக குடும்பத்தார் கடும் அதிருப்தி!
நடிகர் சிவாஜிகணேசனின் மணிமண்டபத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்காதது அதிருப்தி அளிப்பதாக நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தார் அதிருப்தி தெரிவித்துள்ளனர் .
Recommended Video

சென்னை : நடிகர் சிவாஜிகணேசனின் மணிமண்டபத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்காதது அதிருப்தி அளிப்பதாக சிவாஜிகணேசனின் குடும்பத்தார் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மறைந்த நடிகர் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாளாக கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு மணி மண்டபம் கட்டும் பணி தொடங்கியது, இந்தப் பணி முடிந்துள்ளது.
இந்நிலையில் சிவாஜிகணேசனின் 90வது பிறந்தநாளில் அக்டோபர் 1ம் தேதி மணிமண்டபம் திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மணி மண்டபத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் நேற்று மாலை வெளியான அரசு அறிவிப்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ. வந்து சிறப்பித்திருப்பார்
இந்த அறிவிப்புற்கு நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தார் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது : நடிகர் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவது மறைந்த ஜெயலலிதாவின் கனவுத்திட்டமான இருந்தது. அவர் உயிருடன் இருந்திருந்தால் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிவாஜியின் ஆத்மாவிற்கு மரியாதை செலுத்தி இருப்பார்.

ஏமாற்றம்
சிவாஜிகணேசனின் மணிமண்டபத்தை தமிழக அரசு திறக்க இருப்பது மகிழ்ச்சியான செய்தி தான். எனினும் முதல்வரோ, துணை முதல்வரோ நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

அவமரியாதை
சிவாஜி தமிழ்த்திரைப்படங்கள் வழியாக கலாச்சாரம், தமிழ்மொழிக்கு சிறப்புன கேவையாற்றியவர். அப்படிப்பட்ட சிறந்தவருக்கான மணிமண்டப திறப்பு விழா சிறிய அளவில் நடத்தப்படுவது அவருக்கு செய்யப்படும் அவமரியாதை.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்
முதல்வரும், துணை முதல்வரும் இதர அரசுப் பிரதிநிதிகளும் மணிமண்டப திறப்பு விழா நிகழ்ச்சி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மணிமண்டபத்தை திறந்து வைக்காதது அதிருப்தி அளிப்பதாக நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications