கருணாநிதியின் உடல்நிலையை கேட்டு அதிர்ச்சி.. திமுக நிர்வாகி மாரடைப்பில் பலி
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமானதை கேட்டறிந்த திமுக நிர்வாகி தமீம் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமானதை கேட்டறிந்த திமுக நிர்வாகி தமீம் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நேற்று இரவு மோசமான நிலையை அடைந்துள்ளது. அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கருணாநிதியை பார்க்க இரண்டு நாட்களாக திமுக தொண்டர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். சிலர் மிகவும் மிகவும் உணர்ச்சிகரமாக கண்ணீர் பேட்டியளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்ட திமுக நிர்வாகி மாரடைப்பால் பலியாகி உள்ளார். முத்துப்பேட்டையை சேர்ந்த கட்சி நிர்வாகி தமீம் மாரடைப்பால் பலியாகி உள்ளார்.
அவர் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டறிந்துள்ளார். நேற்று கருணாநிதியின் உடல்நிலை மோசமானதை கேட்டதும் இவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த வேதனையில் நிர்வாகி தமீம் மாரடைப்பால் பலியாகி உள்ளார்.
இவருக்கு 50 வயது மட்டுமே ஆகியுள்ளது. இவர் தீவிரமான திமுக தொண்டர் என்று தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications