For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்ணை அடிக்கும் உரிமையை போலீசுக்கு கொடுத்தது யார்? கொதிக்கிறது தமிழகம்

மதுபான கடையை மூடக்கூறியதற்கு ஒரு பெண் தாக்கப்படுகிறார், அதுவும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களால் இல்லை.. மதுவுக்கு எதிராக செயல்பட வேண்டிய அரசாங்கத்தின் பணியாளரான காவல்துறையை சேர்ந்தவராலே தாக்கப்படுகிற

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடப்பதாக முன்னாள் நீதிபதியும், முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு கருத்து கூறி 24 மணி நேரத்திற்குள் நடந்தது அந்த அதிர்ச்சி சம்பவம்.

டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டம் நடத்திய பெண் ஒருவரது கன்னத்தில் மிகவும் கொடூரமாக அறைந்தார் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன். இந்த காட்சி தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக உலகமெங்கும் சென்று சேர மொத்த பேரும் ஷாக்கில் உறைந்து போயுள்ளனர்.

அரச பயங்கரவாதம், போலீஸ் அராஜகம் போன்ற வார்த்தைகளை படித்து மட்டுமே பழக்கப்பட்ட மக்களுக்கு, நேற்று மீண்டும் ஒருமுறை அதை வீடியோவாக பார்க்கும் 'பாக்கியம்' கிடைத்தது.

இதற்கா தாக்குதல்?

மதுபான கடையை மூடக்கூறியதற்கு ஒரு பெண் தாக்கப்படுகிறார், அதுவும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களால் இல்லை.. மதுவுக்கு எதிராக செயல்பட வேண்டிய அரசாங்கத்தின் பணியாளரான காவல்துறையை சேர்ந்தவராலே தாக்கப்படுகிறார் என்பதைவிட ஒரு வெட்கக்கேட்டை இனி தமிழகம் பார்க்க வேண்டுமா? மது வருமானத்தால் அரசை நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலை மட்டுமே போலீசாரின் இந்த கோபத்திற்கு காரணமா, அல்லது அந்த மதுக்கடைகளுக்கு சப்ளையாகும் மதுபானங்களை உற்பத்தி செய்யும் மொதலாளிகளுக்கு காட்டப்படும் விசுவாசமா என்ற கேள்வி சாமானியர்களிடமும் எழுகிறது.

போராடும் உரிமையை பறிக்கலாமா?

போராடும் உரிமையை பறிக்கலாமா?

போராட்டம் எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும், அது இரண்டாம் பட்சம். ஆனால் தாக்குதல் ஏன் என்பதே கேள்வி? ஆயுதம் இன்றி போராட்டம் நடத்த உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் கட்ஜு கருத்து பிரதிபலிக்கிறது.

தொடுவதே கண்ணியம் இல்லை

தொடுவதே கண்ணியம் இல்லை

பெண்கள் போராட்டம் நடத்தும்போது அவர்களை ஆண் போலீசார் தொட்டுக்கூட விலக்க கூடாது என்பதே விதிமுறை. அதற்காகத்தான் பெண் போலீசாரும் போராட்ட களங்களில் குவிக்கப்படுகிறார்கள். ஆனால், கை நீட்டி அறைய ஆண் போலீசான பாண்டியராஜனுக்கு உரிமை கொடுத்தது யார்? தற்காப்புக்காக அடித்தேன் என்று கூறி தப்பிக்கலாம் என்று நினைத்தால், அப்பாவி பெண்ணோ நிராயுதபாணியாக நின்று கொண்டிருந்தது ஊடகங்களால் அம்பலமாகிவிட்டது.

தேசிய ஊடகங்களில் நாறுகிறது

தேசிய ஊடகங்களில் நாறுகிறது

ஒரு பெண்ணை அழ வைத்தால் அந்த குடும்பம் நன்றாக இருக்காது என்ற நம்பிக்கை கொண்ட மாநிலம் தமிழகம். ஆனால், பெண்ணை பொது வெளியில் இன்னொரு ஆண் அடித்து காது செவித்திறனை கெடுக்கும் ஒரு மாநிலம் எப்படி நன்றாக இருக்கும் என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தரம் கெட்டுவிட்ட, தமிழகத்து அரச நிர்வாகத்தை பாரீர்.. என தேசிய ஊடகங்கள் இந்த அப்பட்ட மனித உரிமை மீறலை திரும்ப திரும்ப காட்டிக்கொண்டுள்ளன.

பெண்ணின் மாண்பு

பெண்ணின் மாண்பு

ஜென்ம பகை கொண்ட இரு குடும்பத்து ஆண்கள் மோதிக்கொண்டால் கூட வீட்டிலுள்ள பெண்கள் மீது கை வைக்க மாட்டார்கள். அவர்கள் எந்த முன்னெச்சரிக்கையுமின்றி, தெருவில் நடமாடுவார்கள். பெண்கள் மீது கை வைக்கும் ஆண், ஆண்மை இல்லாதவன் என்ற நம்பிக்கை அடிப்படையிலான, வீர மரபு கொண்டவன் தமிழன் என்பதுதான் இதற்கு காரணம். இப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில் பெண்ணை அடித்த போலீஸ்காரரை இன்னமும் பணியில் தொடர அனுமதிக்க இந்த அரசை நிர்பந்திப்பது யார்?

குலை நடுங்கும் செயல்

குலை நடுங்கும் செயல்

போலீசாரால் தாக்கப்பட்ட ஈஸ்வரி என்ற பெண் இடத்தில், தங்களுடைய அம்மாவையோ, மனைவியையோ, உடன் பிறந்த சகோதரிகளையோ, மகளையோ வைத்து பொருத்திப் பார்த்தால் ஒரு நிமிடம், தமிழகத்து ஆண்களின் ஈரக்குலை அப்படியே நடுங்குமே, இதில் ஒரு சிறு உணர்வும் இந்த ஆட்சியாளர்களுக்கு இல்லையா? உணர்வற்ற நிலையில்தான் இந்த அரசு இருக்கிறதா?, அல்லது ஆர்.கே.நகரில் சில காலம் கழித்து நடைபெற உள்ள இடைத் தேர்தலில் யாரையெல்லாம் பணத்துக்கு மீண்டும் கையேந்த வைக்கலாம் என ஆட்சியிலிருப்பவர்கள் கணக்கு போட்டுக்கொண்டுள்ளனரா?

வழக்கு தொடர முடியும்

வழக்கு தொடர முடியும்

இந்திய தண்டனைச் சட்டம் 323 (வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துவது), பிரிவு 354 (பெண்ணின் மாண்புக்கு களங்கம் விளைவிப்பது) ஆகிய வழக்குகளை பெண்ணை தாக்கிய போலீஸ்காரர் மீது பதிவு செய்ய முடியும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

English summary
Shocking video of police attack on woman at Tirupur is going viral in the national media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X