For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பரத்தில் ஆளுநர் பன்வாரிலால் வருகை... கவனத்தை ஈர்க்க கடையடைப்பு!

சிதம்பரத்திற்கு வருகை தரும் ஆளுநரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இன்று கடையடைப்பு நடைபெறுகிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநர் வருகை..கடையடைப்பு- வீடியோ

    சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கடையடைப்பு நடைபெற்று வருகிறது. மக்கள் நலனில் அரசு அக்கறை காட்டாமல் இருப்பதாக குற்றம்சாட்டி வணிகர்கள் இந்த கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை தருகிறார். மாலை 6 மணியளவில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதோடு, நாட்டியாஞ்சலி விழாவிலும் பங்கேற்கிறார்.

    Shops shut at Chidambaram to seek the attention of governor Banwarilal purohit

    சிதம்பரம் வரும் ஆளுநரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வணிகர்கள் 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் பிரச்னைகளில் அரசு அக்கறை காட்டுவதில்லை என்றும் இதற்காக ஆளுநரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த கடையடைப்பு நடத்தப்படுகிறது.

    மக்கள் பிரச்னைகளான பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர் பிரச்னை உள்ளிட்டவற்றில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சிதம்பரம் நகர மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிதம்பரம் நகர மக்களின் பிரச்னைகளில் அரசு அக்கறை காட்டவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    English summary
    Shops shut at Chidambaram to seek the attention of governor Banwarilal purohit as government is not taking necessary steps to people facing drinking water and drainage issues.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X