சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கு: 4 பேரின் ஜாமீன் மனுக்களை டிஸ்மிஸ் செய்த நீதிபதி
சிவகங்கை: சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கில் கண்டக்டர் மற்றும் சிறுமியின் உறவினர் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சிவகங்கையை சேர்ந்தவர் பள்ளி சிறுமியை தந்தை, அண்ணன் உள்பட ஏராளமானோர் கடந்த பல ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்த புகாரில் சுகந்தியின் தந்தை, உறவினர்கள், சிவகங்கை டவுன் போலீஸ் எஸ்ஐ, கண்டக்டர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்ஸ்பெக்டர், ஏடிஜிபி என சுமார் 28 பேர் வரை பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்யதாக புகார் கூறப்பட்டுள்ள நிலையில், உயர் அதிகாரிகளை தப்ப வைக்க முயற்சி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தனிப்படை சிபிசிஐடி போலீசார் சிறுமி பாலாத்கார வழக்கினை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர தீவிரமாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சிவகங்கை மகிளா நீதிமன்றம் எஸ்ஐ சங்கரின் ஜாமீன் மனு, இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில், கண்டக்டர் நமச்சிவாயம், சிறுமியின் உறவினர் சிவகங்கையை சேர்ந்த முத்துராக்கு ஆகியோர் சார்பில் சிவகங்கை மகிளா நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜெயராஜ் நேற்று விசாரித்து, இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இவர்களது ஜாமீன் மனுக்களும் ஏற்கனவே ஒருமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதேபோல, கைதானவர்களில் ஒருவரான எஸ்.கார்த்திகேயன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு செய்திருந்தார். சிவகங்கையைச் சேர்ந்த டாக்டர் மணிவண்ணன் என்பவர் முன்ஜாமீன் மனு செய்திருந்தார். இரு மனுக்களையும் நீதிபதி வி.எம்.வேலுமணி நேற்று விசாரித்தார். கார்த்திகேயன் மீதான குற்றச்சாட்டு கடுமையானது. இதில் ஜாமீன் வழங்க உத்தரவிட முடியாது. எனவே, மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது'' என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து டாக்டர் மணிவண்ணனின் முன்ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக, அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மனுவையும் டிஸ்மிஸ் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications