அரசு சுகாதார நிலையத்தில் எந்த வசதியுமில்லை... சிவல்பட்டி மக்கள் புகார் : வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில், சிவல்பட்டி கிராமத்தில் வேகமாக மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தால் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

People Visited private Hospitals due to bad Treatment of GH-Oneindia Tamil

சிவகங்கை மாவட்டம் சிவல்பட்டி கிராமத்தில் மர்மக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அதனையடுத்து ஊரில் இருக்கும் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மக்கள் செல்கின்றனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் இல்லாத காரணத்தாலும் காய்ச்சலை குணமாக்கும் வகையில் சரியான சிகிச்சை இல்லாத காரணத்தாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இதனால் வேறுவழியின்றி பொருளாதார வசதி இல்லாத சூழ்நிலையிலும் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் புகார் கூறினர். மேலும், சிவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களும் மருந்துகளும் கிடைக்க வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Insufficient doctor and medicine in Sivalpatti village and affected patients going private hospital. And they demand doctors availability and medicine in Sivalpatti village primary health center.
Please Wait while comments are loading...