கோவில்பட்டி அருகே வேன் கவிழ்ந்து கோர விபத்து.. 2 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி
நெல்லை: கோவில்பட்டி அருகேயுள்ள தளவாய்புரம் பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 12 பேர் கன்னியாகுமாரிக்கு சுற்றுலாச் செல்வதற்காக மதுரையில் உள்ள தனியார் டிராவல்ஸ் மூலமாக வேனில் கன்னியாகுமாரிக்கு கிளம்பியுள்ளனர். வேன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தளவாய்புரம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பாலத்தில் மோதி, அதன் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

இதில் சம்பவ இடத்தில் 4 ஆண்கள், 2 பெண்கள் என 6 பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் வேன் டிரைவர் மதுரையை சேர்ந்த முத்துச்சாமி, 5 பெண் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழ்ந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சம்பவஇடத்தினை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.மகேந்திரன், டி.எஸ்.பி. ஜெபராஜ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்து குறித்து கயத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்தியபிரதேசம் என்பதால் இறந்தவர்களின் விபரம் தெரியவில்லை.
கோவில்பட்டி நான்குவழிசாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் பெயர்கள்:
ரமேஷ்குமார்
கனையாலால்
டீகாம்
லால்சந்த்
ரேகா
விந்தியா
காயம்பட்டவர்கள்:
ரூட்ஸி
சந்திரா
சுனிதா
சரளா
சோனம்
மோக்ஸ்,
டிரைவர் முத்துகாமாட்சி












Click it and Unblock the Notifications