Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவில் ஐஎஸ் ஆதரவாளர்கள் 6 பேர் கைது- தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்

Subscribe to Oneindia Tamil

கோவை: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு நாசவேலையில் ஈடுபட முயன்றதாக கேரளாவில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த நபரும் இந்த பயங்கரவாத அமைப்பில் இணைந்திருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் இணைந்து தென்னிந்தியாவில் மக்கள் கூடும் பொது இடங்கள் மற்றும் பிரபலங்களை குறிவைத்து தாக்க இவர்கள் திட்டமிட்டிருந்ததும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்தியாவில் 21 பேர் அண்மையில் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர்களைக் கண்டறியும் பணியில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்பினரால் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 6 பேர் கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 4 பேரை கோவையில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஎஸ் பயங்கரவாதிகள்

ஐஎஸ் பயங்கரவாதிகள்

கேரளாவைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 21 பேர் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தது, தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லி, கேரளா போலீசார் இவர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் கனகமலை வனப்பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 6 பேர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

தேசிய புலனாய்வு அமைப்பு

தேசிய புலனாய்வு அமைப்பு

மத்திய அரசுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பு, இவர்களை கைது செய்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஈர்ப்பில் இவர்கள் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை இவர்கள் சேகரித்ததாகவும், தென்இந்தியாவில் மக்கள் கூடும் பொது இடங்கள் மற்றும் பிரபலங்களை குறிவைத்து தாக்க இவர்கள் திட்டமிட்டிருந்ததும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்தது.

தமிழக நபரும் கைது

தமிழக நபரும் கைது

தகவலின் அடிப்படையில், கேரள, தமிழக காவல் துறை, டெல்லி காவல் துறை மற்றும் தெலங்கானா காவல் துறையுடன் இணைந்து தேசிய புலனாய்வுத் துறை இவர்களை கண்காணித்து வந்ததாக கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரில் அபு பஷீர்‌ என்பவர் கோவையின் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், திருச்சூரைச் சேர்ந்த ஸ்வாலி முகமது என்பவர் சென்னையில் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தி, விசாரணைக் காவலில் எடுக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த நபர்

கோவையைச் சேர்ந்த நபர்

கைதானவர்களில் கோவையை சேர்ந்தவரும் ஒருவர். இவரிடம் நடத்திய விசாரணையில் கோவை உக்கடம் பகுதியில் மேலும் சிலர் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நள்ளிரவில் உக்கடம் நகருக்கு சென்று சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையறிந்த அந்த பகுதி மக்கள், ஏராளமானோர் திரண்டு போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னையிலும் விசாரணை

சென்னையிலும் விசாரணை

ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக கருதப்படும் ரகுமான், நவாஸ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அவர்களிடமிருந்து ஐஎஸ் அமைப்பு தொடர்பான சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை கொட்டிவாக்கம் சத்யா தெருவிலும் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கைதான ஐஎஸ் ஆதரவாளர்கள் மூலம் கேரளா மற்றும் தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது தெரியவந்துள்ளது.

நெல்லையில் ஒருவர் கைது

நெல்லையில் ஒருவர் கைது

இதனிடையே நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தேசிய புலனாய்வு அமைப்பினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கைதான 6 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சுபஹானி கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சுபஹானி ஐ.எஸ். ஆதரவாளரா என தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+